அரியலூர் மாணவி மரணம் காரணமாக கொதிப்பாக இருந்த மைக்கேல்பட்டி பகுதியை உள்ளடக்கிய பேரூராட்சியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.தமிழ்நாட்டில் மிக பெரிய சர்ச்சையை உருவாக்கிய நிகழ்வு அரியலூர் மாணவி மரணம்.இவரின் மரணத்திற்கு மத மாற்ற காரணம் இருப்பதாகவும் பாஜக புகார் வைத்தது.இதனை அடுத்து இவ்விவகாரம் தமிழகம் முழுவதும் பேசு பொருளானது.
இதனால் மைக்கேல்பட்டி மிகவும் கொதிப்பாக காணப்பட்டது. மத மாற்ற புகார் காரணமாக இந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது. அதோடு இப்பகுதிக்கு பாஜக தலைவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு சென்றனர். அது மட்டுமின்றி பாஜக சார்பாக மறைந்த மாணவி குடும்பத்திற்கு பாஜக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் மைக்கேல்பட்டி இருக்கும் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பாஜக கால் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு பாஜகவை மக்கள் புறக்கணித்து உள்ளனர். மைக்கேல்பட்டி உள்ள திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக அப்பகுதி மக்கள் மத ரீதியான மோதல்களை உருவாக்க பா.ஜ.க முனைவதாக குற்றம்சாட்டினர்.மேலும் எங்களை இடையே பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்று இப்பகுதி மக்கள் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.