படாதபாடு பட்டு எடை குறைக்க முயற்சி செய்ய வேண்டாம். மேலும் விருப்பத்துடன் ஒரு வேலையை செய்யும் போது மிகவும் எளிதாக தான் இருக்கும். இந்த சின்ன தொப்பை குறைக்க எவ்வளவோ முயற்சி பண்ணி எடை குறைய மாட்டிங்குது என கவலை படாதீங்க.. இதோ இந்த சில விஷயங்களை செய்க… எப்படி தொப்பை குறையுதுனு பாருங்க.
- உடல் எடை குறைக்க முதல் தேவை தினம் ஒரு முயற்சி செய்யறது. தினம் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி, தினம் சரியான உணவு முறை, இப்படி.. நம்மில் நிறைய பேர் என்ன செய்வோம் என்றால், ஒரு நாள் செய்து விட்டு ஒரு வாரம் லீவு எடுத்து கொள்வது. இப்படி இருந்தால் எப்படி எடை குறையும். தினம் ஒரு செயலை செய்யும் போது நிறைய மாற்றங்களை நம்மால் உணர முடியும். தொடர்ந்து ஒன்றை பழக்க படுத்தி கொள்ள வேண்டும்.
- சர்க்கரை எடுத்து கொள்வது தவிர்த்து விடுங்கள். சர்க்கரை உடலில் கொழுப்பை சேர்வதை அதிகரிக்கும். அன்றாட உணவில் சர்க்கரை சேர்க்க வேண்டாம்
- பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோடா ட்ரிங்க்ஸ், எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்க்கவும்.
- ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். மேலும் வளர்சிதை மாற்றம் சரியாக வேலை செய்ய உதவும்.
- நார்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது உடலுக்கு ஆரோக்கியமாகவும், உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கும். குறைவாக சாப்பிட்டாலே அதிகம் சாப்பிட உணர்வை தரும்.
- தினம்ஒரு மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உடற்பயிற்சிகளை தேர்வு செய்வது அவசியம். இது உடற்பயிற்சி செய்யும் அலுப்பு இல்லாமல் தொடர்ந்து பயிற்சி செய்ய உதவியாக இருக்கும்.
- மனதை ரிலாக்ஸாக வைக்க தினம் மூச்சு பயிற்சி மற்றும் தியான பயிற்சி செய்ய வேண்டும். இது ஸ்ட்ரெஸ் இல்லாமல் இருக்க உதவும். மேலும், ஸ்ட்ரெஸ் காரணமாக ஹார்மோன் மாற்றங்கள் சரியாகும்.