எடை குறைக்க அனைவரும் எடுக்கும் முதல் முயற்சி டயட் ல இருக்கிறது தான். ஆனால் டயட் ல இருக்கேன்னு சொல்லிட்டு அத முறையாக செய்ய முடியாமல் நிறைய பேரு இருகாங்க.. பொதுவா அவர்கள் செய்யும் தவறை தெரிந்து கொள்ளுங்கள்.
குறைவாக உணவு எடுத்து கொள்வது. – கொஞ்சமாக சாப்பிட்டால் எடை குறையும் என நினைத்து கொண்டு, மிகவும், குறைவாக உண்பது, நேரத்திற்கு உணவு எடுத்து கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களினால், உணவு போதுமான அளவு எடுத்து கொள்ள முடியாமல் இருக்கும். அதாவது, எப்போதும் பசியுடன் இருப்பது போன்று இருக்கும். மேலும், ஊட்டச்சத்து குறைபாடு வரும்.
எப்போதும் ஒரே மாதிரி உணவு எடுத்து கொள்வது – டயட் என்கிற பெயரில் ஒரே மாதிரி குறைந்த கலோரி உணவுகளை எடுத்து கொள்ள நேரிடும். மேலும் இது போன்ற உணவுகளை எடுத்து கொள்வது ஒரு வித அலுப்பை தரும். நீண்ட நாட்களுக்கு ஒரே மாதிரி எடுத்து கொள்ளும் போது ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்துகள் அதிகமாவும், மற்ற ஊட்டச்சத்துகள் குறைவாகவும் எடுத்து கொள்ள நேரிடும். உதாரணமாக புரத சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ளும் போது மற்ற வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்கள் குறைந்து விடும்.
70% டயட் 30% உடற்பயிற்சி மற்றும் தூக்கம் – நாம் தான் டயட் ல இருக்கோம் அதனால் உடற் பயிற்சி ஏதும் செய்ய வேண்டாம் என நினைக்காதீர்கள் இது மிகவும் ஆபத்தானது. முறையான சரிவிகித உணவு, தேவையான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் இவை அனைத்தும் மிகவும் முக்கியம். இவை எல்லாம் சமமான அளவில் இருந்தால் மட்டுமே உடல் எடை குறைப்பது சாத்தியமாகும்.
உடல் எடை குறைப்பதற்கு எந்த குறுக்கு வழியும் இல்லை. சில விஷயங்களை தொடர்ந்து செய்வது தான் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு உதவும். சில நாட்கள் செய்வது பெரிய அளவில் பயனளிக்காது. ஒரு வாரம் டயட் எடுத்து கொள்கிறேன் ஒரு மாதம் ஓய்வு எடுத்து கொள்கிறேன் என நினைத்தால் அது சரியாக வராது.