Site icon ழகரம்

ஆரோக்கியமாக வாழ இந்த 5 உணவுகளை எடுத்து கொள்ளாதீர்கள்

சர்க்கரை  –  இது நீரிழுவு நோய், உடல் பருமன், ஊட்ட சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகளை  தருகிறது. இதனால் உடலில் பல பிரச்சனைகள் வரும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல், உடலில் கெட்ட கொழுப்பு சேருதல் போன்ற பிரச்சனைகள் வரும்.அதனால் முடிந்த வரை சர்க்கரை  சேர்த்த எந்த உணவையும் எடுத்து கொள்ளாதீர்கள்

Different sugar on dark table

பீட்சாக்கள்- இதில் உலகில் பிரபலமான துரித உணவாகும். இது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மற்றும் மாவுகள் கொண்டு தயாரிக்க படுகிறது. இதன் சுவைக்காக அதிகமாக வேதியல் பொருள்கள் சேர்க்கப்படுகிறது. இது உடலில் கெட்ட கொழுப்பை அதிகமாக்குகிறது. இரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்படுத்துகிறது. இது ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால் வெளியில் சென்று பிட்சா சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்

பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் – உருளை கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இது உடலுக்கு நன்மை தரும். ஆனால் உருளை கிழங்கை வெட்டி முழுக்க முழுக்க எண்ணையில் பொரித்து சாப்பிடுவது, உடலுக்கு தீங்கை தரும். இதில் அதிக கலோரிகள் உள்ளது. மேலும். உடல் பருமன் மாற்றும் ஹார்மோன் பிரச்சனைகளை தரும். நீண்ட நாட்களுக்கு இது எடுத்து கொள்ளும் போது , புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்பாக இருக்கும்.

சோடா – இன்று இளைஞர்கள் அதிகமாக சோடா பானங்களை எடுத்து கொள்கின்றனர். இது உடலுக்கு கேடாக முடியும். சோடா பானங்கள் எலும்புகள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எலும்புகள் சீக்கிரம் தேய்மானம் அடையும். எலும்புகளின் அடர்த்தி குறைந்து விடும். இதனால் அடிக்கடி மூட்டுவலி, குத்துவலி போன்ற பிரச்சனைகள் வரும். முடிந்த வரை சோடா பானங்கள் எடுத்து கொள்வதை தவிர்த்து விடுங்கள்

இது போன்ற உணவுகளை அன்றாடம் எடுத்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. இது நாட்பட்ட நோய்களை தரும். மேலும், இதற்கு பதிலாக சிறந்த இயற்கை உணவுகளையும், வீட்டில் தயாரித்த உணவுகளையும் எடுத்து கொள்வது  நல்லது. இது நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு உதவும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொரோனா போன்ற தொற்று நோய்கள்  வராமல் இருக்கும்.

Exit mobile version