இன்றைய நவீன டயட் முறையில், மிகவும் அதிகமாகவும், அனைவராலும் சொல்லப்படும் விஷயம் இது தான். அதாவது, 2 மணி நேரத்திற்கு ஒரு முறை குறைவாக சாப்பிடுங்கள் இது உடலில் வளர் சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்களிக்கும்.
இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடலுக்கு என்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
காலை உணவு ஒரு 8 மணிக்கு சாப்பிட பிறகு அடுத்த உணவு ஒரு 11 மணிக்கு எடுத்து கொள்ளலாம். இது மிகவும் பயனளிக்கும். ஒரே நேரத்தில் அதிக கலோரிகள் எடுத்து கொள்வதற்கு பதில் கலோரிகளை பிரித்து சாப்பிட உதவும். இது ஒரு முறை சாப்பிட உணவு செரிமானம் அடைந்த பிறகு அடுத்த உணவை எடுத்து கொள்ள உதவும்.
உடல் எடை குறைபவர்கள், நீரிழிவு நோய் இருப்பவர்கள், மேலும், டயட் முறை பின்பற்றி உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பவர்கள் அனைவரும் இந்த மாதிரி 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடலாம்.
இது இரத்தத்தில் சேரும் சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும்.
இது போன்று உணவை பிரித்து சாப்பிடுவதால் என பிரச்னை வரும், உணவு பிரியர்களுக்கு இது மிகவும் ஆச்சரியமாக இருக்கும். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சாப்பிடலாம் என்ற தகவல் அனைவர்க்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இரண்டு மணி நேரத்திற்க்கு ஒரு முறை என்ன சாப்பிடலாம் என தெரிந்து கொள்வது அவசியம். காலை 8 மணிக்கு காலை உணவு 2 இட்லி அல்லது குறைந்த அளவு பழங்கள் எடுத்து கொள்ளலாம். அடுத்து 11 மணி போல அடுத்த உணவு சூப் ,அல்லது முளைகட்டிய பாசிப்பயறு போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். அடுத்து 1 மணிக்கு குறைவாக சாதம், ஒரு காய் இவற்றை எடுத்து கொள்ளலாம். மேலும் 3 மணிக்கு ஒரு கப் பழங்கள் எடுத்து கொள்ளலாம். ஒரு 5 மணிக்கு சூப் அல்லது க்ரீன் டீ போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இரவு 7 மணிக்கு சப்பாத்தி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். இது போன்று ஒரு நாளைக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துக்களையும் பிரித்து எடுத்து கொள்ளலாம்.