பருவ மழை தொடங்கிய நேரத்தில் இருந்து ஒவ்வொரு நோயாக வந்து போகும். சளி இருமல், காய்ச்சல் போன்றவை இந்த மழை காலத்தில் சாதாரணமாக வந்து போகும். அதுவும் இப்போது இருக்கும் கொரோனா சூழலில், சாதாரண சளி பிடித்தால் கூட கொரோனா வந்து இருக்குமோ என அச்சம் வந்து விடுகிறது. அதனால் மிகவும் கவனமாகவும், மிகுந்த பாதுகாப்புடனும் இருப்பது அவசியம்.
சளி, இருமல் வந்தால் அனைவரும், சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி அப்புறம் தான் மருத்துவரிடம் செல்வோம். இந்த பருவமழை பிரச்சனைகள் எல்லாம் விரைவில் குணமாகும். இங்கே சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே
துளசி மற்றும் மஞ்சள் தண்ணீர் – துளசி மற்றும் மஞ்சள் மிக சிறந்த மூலிகைகள் ஒவ்வொரு வீட்டிலும் காட்டாயம் இருக்க வேண்டிய செடி துளசி செடி ஆகும். வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் சின்னதாக துளசி வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் துளசி இலைகள் மற்றும் மஞ்சள் இரண்டையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து குடிக்கலாம். துளசி மற்றும் மஞ்சள் இவை இரண்டும் ஆண்டிபையோட்டிக் குணம் உடையது. அதனால் இவை இரண்டையும் எடுத்து கொள்வது, தொற்று நோய்கள் வராமல் பார்த்து கொள்ளும்
இஞ்சி மற்றும் தேன் – இஞ்சி இடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேவையான அளவு தேன் கலந்து எடுத்து கொள்ளலாம். இது இருமல், தொண்டை கரகரப்பு போன்றவற்றை நீக்கும். இது பாக்டீரியா க்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. தேன் சளி, இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும் பண்பு கொண்டது.
அதிமதுரம் தேனீர் – அதிமதுரம் பொடி மற்றும் இஞ்சி சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த கசாயத்தில் தேவையான அளவு தேன் கலந்து கொள்ள வேண்டும். அதிமதுரம் மிகவும் சிறந்த மூலிகை ஆகும். இது நுரையீரல் சம்பந்தமான அணைத்து பிரச்சனைகளும் தீர்க்கும். குறிப்பாக சளி , இருமல், மூச்சு விடுவதில் சிரமம், சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருந்தால் தொடந்து அதிமதுரம் எடுத்து கொள்வது சிறந்த தீர்வளிக்கும்.