தலைக்கு தினம் ஒரு 5 நிமிடங்கள் நேரம் ஒதுக்கி மசாஜ் செய்யுங்கள் போதும். முடி வளர்ச்சி அதிகமாகும்.
விரல் நுனியில் எண்ணெய் எடுத்து தலையில் மசாஜ் செய்ய வேண்டும். தினம் குறைந்தது 5 நிமிடங்கள் மசாஜ் செய்வது அவசியம். இதை செய்வதால் தலைக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரத்தம் ஓட்டம் அதிகரிப்பதால் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். மனஅழுத்தம் குறைக்க உதவும். எந்த நேரத்திலும் மனப்பதற்றம் இல்லாமல் நிதானமாக இருக்க உதவும்.
முடிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் கிடைக்கும் போது முடி நல்ல அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும். தினம் மசாஜ் செய்வதும், தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவுகள் எடுத்து கொள்வதும், முடி வளர உதவும். முடிக்கு தேவையான புரத சத்துக்களை எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம், நேரடியாக கிடைக்கும். அதனால் பாதாம் எண்ணெய் , தேங்காய் எண்ணெய் போன்றவரை முடிக்கு பயன்படுத்தலாம். பழங்காலத்தில் நல்லெண்ணெய் பயன்படுத்தினர்.
முடி நல்ல வலுவாக வளர உதவும். மேலும், வலு இல்லாமல் இருக்கும் முடிகள் உதிர்ந்து புதிதாக வளரும். புதிதாக வளரும் முடி ஆனது நல்ல வலுவாக வளர உதவும்.
முடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணம் மனஅழுத்தம் ஆகும். மனஅழுத்தம் குறைக்க ஸ்கேல்ப் மசாஜ் உதவியாக இருக்கும். மனஅழுத்தம் குறைத்து தலையில் இருக்கும் வெப்பம் குறைந்து இருக்கும். தலையில் வெப்பம் அதிகமானாலும், முடி உதிரும். வெப்பத்தை குறைக்க எண்ணெய் வைத்து மசாஜ் செய்வது நல்லது.
சிலருக்கு எண்ணெய் அதிகமாக சுரக்கும். இதனால் முகத்தில் எண்ணெய் வடியும். மசாஜ் செய்யும் போது செபசியஸ் சுரப்பியில் இருந்து சுரக்கும் எண்ணெய் குறையும். அதனால் தினம் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது, நாளடைவில் எண்ணெய் சுரப்பை குறைக்கும். மேலும் தலையில் படிந்து இருக்கும் இறந்த செல்கள் வெளியேறவும் இது உதவும்.
மசாஜ் செய்வதால் இது போன்ற எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். தினம் ஒரு 5 நிமிடங்கள் மசாஜ் செய்வது நல்லது. இதற்காக தனியாக நேரம் ஒதுக்கி செய்ய வேண்டும். சோம்பேறி தனம் படாமல், தினம் செய்து பாருங்கள் சிறந்த நன்மை அளிக்கும்.