வாழ்க்கைமுறை

நிறத்திற்கும் உணவிற்கும் இருக்கும் தொடர்பு என்ன தெரியுமா ?

பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா .. அதே போல் உணவும் வித்தியாசமாக இருக்கும்.

நிறத்தை பொறுத்து உணவில் பயன்கள் மற்றும் அதை எடுத்து கொள்வதால் வரும் நன்மைகள் மாறும். நிறத்தையும் உணவையும் வைத்து கண்டுபிடிக்க பட்டது தான் இந்த ரெயின்போ டயட் . பெயரே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா .. அதே போல் உணவும் வித்தியாசமாக இருக்கும்.  ரெயின்போ எப்படி ஏழு நிறங்களை கொண்டுள்ளதோ, அதே போல் இந்த ஏழு நிறங்களை வைத்து உணவும் பிரிக்கப்படுகிறது. ஊதா, மஞ்சள், ஆரஞ்சு , சிவப்பு, பச்சை, நீலம் , இண்டிகோ நிறங்களை கொண்டு உணவும் பிரிக்க படுகிறது. வாரத்தின் ஏழு   நாட்களில் இந்த ஏழு விதமான உணவை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நிறம் ஏழு நிறம் ஏழு நாட்கள் என பிரிக்க படுகிறது. இதில் ஒவ்வொரு உணவும் அதற்கு உரிய சத்துகளை கொண்டுள்ளது.

மஞ்சள் – மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காய், அல்லது பரங்கி காய், சோளம், மஞ்சள் குடைமிளகாய் , அன்னாசிப்பழம், போன்ற உணவுகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது உடலை வலுப்படுத்தவும், செரிமான உறுப்புகளை வலுப்படுத்தவும் உதவும். இது செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது.

சிவப்பு – ஆப்பிள், சிவப்பு குடைமிளாகாய், தக்காளி, பீட்ரூட், தர்பூசணி, செர்ரி, போன்றவை சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை எடுத்து கொள்வதால், உடலில் வீக்கம் வராமல் இருக்கும். இது ஆண்டிஆக்ஸிடெங்கள் நிறைந்த உணவாகும்.

ஆரஞ்சு – கேரட், ஆரஞ்சு பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, மாம்பழம் போன்றவை ஆரஞ்சு நிற உணவுகள் இதை எடுத்து கொள்வதால்,இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்துகிறது. இதில் பீட்டா கரோடின் நிறைந்து இருக்கிறது.

ஊதா நிறம் – முட்டைகோஸ், கத்தரிக்காய் போன்றவை இதில் வரும். இது ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. இது புத்துணர்ச்சியாக வைக்க உதவும்.

 

பச்சை நிறம் – வெண்டைக்காய், பாகற்காய்,  முருங்கை காய், பச்சை ஆப்பிள், கொய்யாப்பழம் போன்றவவை பச்சை நிற உணவுகள், இது உடலில் இருக்கும்  கழிவுகளை வெளியேற்றவும், உடலை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும்.

இது போன்று அனைத்து நிறத்திற்கும் உணவுகள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் கொண்ட உணவுகள் அல்லது இரண்டு  நிறங்கள் சேர்த்த உணவுகள் எடுத்து கொள்ளலாம். மிகவும் வண்ணமயமான உணவுகள் குழந்தைகளுக்கு உணவை  பழகுவதற்கு எளிமையாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button