இளம் பருவ வயதில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனை தான் இந்த முகப்பரு. பருவ வயத்தில் ஆண் பெண் இருவர்க்கும் உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இந்த முகப்பரு வருகிறது. இது அவர்களின் அழகை கெடுத்து விடும். இந்த முகப்பரு பிரச்னை வராமல் இருக்க பல வகையாக கிரீம்கள் மார்க்கெட்களில் கிடைக்கிறது. இதை அதிக செலவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சிலருக்கு இது சிறந்த தீர்வை தரும். சிலருக்கு இது முகப்பருவை அதிகரிக்கும். இதை இயற்கையான முறையில் எப்படி சரி செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம்.
- ஒரு நாளைக்கு 4- 6 முறை முகத்தை பேஸ் வாஸ் பயன்படுத்தி முகத்தை கழுவலாம்.
- முகத்தில் பழ தோலை தடவலாம். உதாரணமாக இப்போது பப்பாளி சாப்பிட்டு கொண்டு இருக்குறீர்கள் என்றால், பாப்பாளி தோலை முகத்தில் தடவலாம். இது முக தோலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரும். இதே போல் அனைத்து பழதோல்களையும் பயன்படுத்தலாம்.
- முகத்தில் முல்தானி மாட்டி மற்றும் பன்னீர் தண்ணீர் சேர்த்து தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவலாம்.
- மாதம் இரண்டு முறை இயற்கையான பொருள்களை பயன்படுத்தி புரூட் பேஷியல் செய்யலாம்.
இவை அணைத்து வெளிப்புறமாக செய்ய வேண்டியது.
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதும் ஹார்மோன் மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகள் அதிகம் எடுத்து கொள்வதும், முகபரு வருவதற்கு காரணமாக இருக்கும். இதனால் இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இயற்கையான உணவுகள் அதிக பழ உணவுகள், தினம் சிறிது நேரம் வெயிலில் நின்று வைட்டமின் டி ஊட்டச்சத்தை எடுத்து கொள்வது, ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தொடர்ந்து செய்வது முகப்பரு வராமல் தடுக்கும். மேலும் முகப்பரு வருவதற்கு காரணமான ஹார்மோன் மாற்றங்கள் வராமல் தடுக்கும்.