மாதவிடாய் பற்றி அனைவரும் பல்வேறு கட்டுக்கதைகளை கேட்டு இருப்போம். மாதவிடாய் சுழற்சி என்பது பெண்களின் உடலில் நடக்கும் ஒரு இயற்கையான மாற்றம் ஆகும். இது ஒவ்வொரு மாதமும் 28 – 35 நாட்கள் இடை வெளியில், 3 நாட்கள் இரத்த போக்கு இருக்கும். இது பெண்களின் உடலில் நடக்க கூடிய மிகவும் இயல்பான ஒரு விஷயமாகும். ஆனால் இதை தீட்டு, அசுத்தம், இந்த நேரத்தில் பெண்கள் இந்த வேலைகளை செய்ய கூடாது, இதை தொட கூடாது என பல்வேறு கட்டுக்கதைகள் இன்றும் இருந்து வருகிறது.
கதை – பெண்களின் உடலில் இருந்து அசுத்த இரத்தம் வெளியேறுகிறது.
உண்மை – பெண்களின் உடலில் இருந்து எந்த அசுத்த இரத்தமும் வெளியேறுவதில்லை. இது முழுக்க இரத்தம், கருப்பை திசு, சளி போன்ற திரவம் மற்றும் பாக்டீரியா போன்றவற்றை கொண்டு இருக்கும். அதனால் இது உடலில் இருக்கும் கழுவுகளை இரத்தத்தின் வழியே வெளியேறுகிறது என சொல்ல முடியாது. இது உடலில் இருக்கும் 30 – 50 மிலி இரத்தம் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியின் போதும் வெளியேறுகிறது.
கதை – மாதவிடாய் நேரத்தில் தலை குளிக்கலாம் / குளிக்க கூடாது –
உண்மை – ஒரு சாரார் தலை குளிக்க வேண்டும் எனவும், ஒரு சாரார் தலை குளிக்க கூடாது எனவும் கூறுகின்றனர். உண்மை என்ன வென்றால் தலை குளிப்பதற்கும், மாத விடாய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அவரவர் விருப்பத்திற்கும், சௌகரியத்திற்கு ஏற்றாற் போல் தலை குளிப்பதும், தலை குளிக்காமல் இருப்பதும்.
கதை – புளிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உண்மை – புளிப்பு உணவுகளை எடுத்து கொள்ள கூடாது என கூறுவார்கள். புளிப்பு உணவுக்கும், மாத விடாய் கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
கதை – தனிமையில் இருக்க வேண்டும். வீட்டிற்குள் வர கூடாது, யாரையும் தொட கூடாது.
உண்மை – கிராம புறங்களில் இது போன்ற விஷயங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. மாதவிடாய் நேரத்தில் பெண்ணிடம் இருந்து தண்ணீர் வாங்கி குடிக்க மாட்டார்கள். தனிமையில் வீட்டில் ஒரு மூலையில் அமர வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு தனியாக அணைத்து பொருள்களையும் தருவார்கள். இது முழுக்க முழுக்க கதை தான். இதில் எந்த அறிவியல் உண்மையும் இல்லை.