நீரிழிவு நோய்க்கு சிறந்த காய் – வெண்டை காய்
வெண்டைக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக வெண்டைக்காய் எடுத்து கொள்வது பிடிக்கும்
வெண்டைக்காய் எடுத்து கொள்வதால் சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வரும். வெண்டைக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமாக வெண்டைக்காய் எடுத்து கொள்வது பிடிக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கூட வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்று சொல்லி தான் இந்த காய் பழகுவோம். வெண்டைக்காய் தண்ணீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீர் மற்றும் காய் சேர்த்து சாப்பிடுவோம். மேலும் வெண்டை காய் பொரியல், வெண்டை காய் குழம்பு என ஏதுவாக வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
வெண்டை காயில், நார்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி, வைட்டமின் சி, போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. இது பல்வேறு நோய்களை வராமல் தடுக்கிறது. இதனால் இது சூப்பர் உணவு ( super food ) எனவும் அழைக்க படுகிறது. இதில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் அதிக நார்சத்து இருப்பதால் உடல் எடை சீராக வைக்க உதவும்.
இது இயற்கையான பண்பு நலன்களால் இன்சுலின் சரியாக வேலை செய்ய உதவும். பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாமல், அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்து இருக்கும். நோயின் ஆரம்ப நிலை இன்சுலின் சரியாக வேலை செய்ய இந்த வெண்டைக்காய் மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி இதை உணவில் சேர்த்து கொள்வது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
இதில் ஆண்டிஆக்ஸிடென்கள் நிறைந்து இருப்பதால், மனஅழுத்தத்தை குறைக்கும். நீரிழிவு நோய் வருவதற்கு ஒரு காரணம் மனஅழுத்தம் ஆகும். இந்த மனஅழுத்தம் வராமல் இருக்க வெண்டை காய் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இத்தனை பயன்கள் இருக்கும் இந்த வெண்டைக்காயை எந்த வழிமுறைகளில் எடுத்து கொள்ளலாம்.
- வெண்டைக்காய் சிறிதாக வெட்டி இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலை எடுத்து கொள்ளலாம்.
- வெண்டைக்காய் பச்சையாகவும் மென்று சாப்பிடலாம்.
- வெண்டைக்காயின் விதைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம். பின்னர் அந்த பொடியை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
- வெண்டைக்காய் பொரியல் செய்து சாப்பிடலாம். எண்ணெய் குறைவாக பயன்படுத்தி, சமைத்து சாப்பிடலாம்.