தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஆயுள்காலம் நீடிக்கும். நெல்லிக்காய் ஊட்டச்சத்து நிறைந்தது. வைட்டமின் சி சத்துகள் நிறைந்து இருக்கிறது. மேலும், நெல்லிக்காய் பல வகைகளில் எடுத்து கொள்ளலாம். நெல்லிக்காய் பொடி ,நெல்லிக்காய் துவையல், நெல்லிக்காய் சாறு, நெல்லிக்காய் தேனில் ஊறவைத்து எடுத்து கொள்ளலாம். நெல்லிக்காய் லேகியம் செய்து சாப்பிடலாம்.
இந்த நெல்லிக்காய் லேகியம் எளிமையான முறையில் வீட்டில் செய்து சாப்பிடலாம்.
நெல்லிக்காய் லேகியம் செய்ய தேவையான பொருள்கள்
நெல்லிவற்றல் – 1 கிலோ ( நெல்லிக்காயை வாங்கி கழுவி கொட்டைகளை நீக்கி பொடியாக நறுக்கி வெயிலில் உலர விட்டு எடுத்தது
தண்ணீர் – அரை லிட்டர் அளவு
சர்க்கரை – 1 கிலோ அல்லது இனிப்புக்கேற்ப கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம்.
அதிமதுரம் -50 கிராம்
கூகைநீர் – 30 கிராம்
திராட்சை – 50 கிராம் (உலர் திராட்சை)
பேரீச்சம்ப்பழம் – 100 கிராம் ( இனிப்புக்கேற்ப கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம்)
திப்பிலி – 50 கிராம்
சுத்தமான தேன் – 100 கிராம்
பசு நெய் – 100 கிராம்
செய்முறை
நெல்லிக்காய் வற்றலை எடுத்து தண்ணீரில் போட்டு வேகவைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு தயாரிக்கவும். பின்னர் வேகவைத்த நெல்லிக்காய் எடுத்து சர்க்கரை பாகில் சேர்க்கவும்.அதிமதுரம், கூகை நீர், உலர் திராட்சை, பேரீச்சம்பழம், திப்பிலி அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்க்கவும். இப்போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளறவும். நன்றாக அல்வா பதத்திற்கு வந்த பிறகு அதை இறக்கி, ஏலக்காய் சுக்குத்தூள் சேர்த்து கிளறவும். இதை எடுத்து ஒரு பாட்டிலில் வைத்து கொள்ளவும். தினம் ஒரு துண்டுகளாக எடுத்து கொள்ளலாம்.
பயன்கள்
- நெல்லிக்காய் லேகியம் ஊட்டச்சத்து மிக்கது. அனைவரும் தினம் ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளலாம்.
- ஹீமோகுளோபின் குறைவாக இருந்து இரத்த சோகை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும்.
- உடல் சோர்வாக இருப்பவர்களும், நீர்சத்து குறைப்பாடு இருப்பவர்கள் தினம் எடுத்து கொளவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
- வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க உதவும்.
- உடல் வலுப்பெற உதவும். மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கும்.