Site icon ழகரம்

இந்த பழக்கங்களை விட்டு விடுங்கள். இது ஆரோக்கியத்தை பாதிக்கும்.

சில பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை கேடாய் முடியும். உடலுக்கு வளர்சிதை மாற்ற நோய்கள், மற்றும், எலும்பு மூட்டுகளில் வலி, உடல் பருமன், நீரிழுவு நோய் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற பிரச்சனைகள் வரும். சில அன்றாட பழக்கங்கள் நாளடைவில் நோயை தரும்.

இந்த பழக்கங்களை மாற்றி கொள்வது அவசியம். தினம் செய்யும் பழக்கம் ஒரே நாளில் பெரிய மாற்றத்தை தராது. தினந்தோறும் இதை செய்யும் போது, உடலுக்கு பல பிரச்சனைகளை தரும். குறிப்பாக இந்த 5 பழக்கங்களை மாற்றி கொள்ளுங்கள்.

தூக்கம் – எதற்காகவும், தூக்கத்தை சமரசம் செய்யாதீர்கள். வாழ்வில் வெற்றி பெற உழைப்பு எந்த அளவுக்கு  அவசியமோ, அந்த அளவுக்கு தூக்கம் மிகவும் அவசியம். ஒரு நாள் நீங்கள் தூங்க வில்லை என்றால், அடுத்த நாள் நீங்க எப்படி உணர்வீர்கள், ஓய்வினமை, உடல் சோர்வு, எரிச்சல், குழப்பம், போன்ற எந்த ஒரு  வேலையும் முழுமையாக செய்ய முடியாத மனநிலை என பல்வேறு மாற்றங்கள்  இருக்கும். அதனால் கட்டாயம் 6 – 8  மணி நேரம் தூக்கம் அவசியம்.

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது – நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகளை தரும்.  இது  எலும்புகளை பலவீன படுத்தும். அதனால், முதுகு வலி, எலும்புகள் தேய்மானம் போன்ற பிரச்சனைகள் வரும். ஒவ்வொரு 60 நிமிடத்திற்கு ஒரு முறை எழுந்து நடந்து உடலை தளர்வாக வைத்து கொள்வது அவசியம்.

உணவு – முடிந்த வரை சத்துள்ள ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய்யில் பொறித்த வறுத்த உணவுகள், பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சர்க்கரை, சோடா ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள். உணவு என்பது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீண்ட நேரம் தனிமையில் இருக்காதீர்கள் – இது பல்வேறு மனஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது மிகவும் மோசமான பழக்கம் ஆகும். சில நேரங்களில் தனிமையில் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் இது பல்வேறு பிரச்சனைகளை தரும். முடிந்த வரை தனிமையில் இருக்காதீர்கள் .

ஊட்டச்சத்து குறைபாடு – ஒரு  சாரார் அளவுக்கு அதிகமா சாப்பிட்டு உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சாரார் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கூட கிடைக்காமல் அவதி படுகிறார்கள். இது போன்று ஊட்டச்சத்து குறைபாட்டால் இருந்தால் இது உடலுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். முடிந்த வரை ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒரு  நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் உணவில்  இருந்து மட்டும் எடுத்து கொள்ள முடியும்

 

Exit mobile version