இரவில் தூங்குவதற்கு முன் சில உணவுகளை எப்போதும் எடுத்து கொள்ள கூடாது. கீரை, தயிர், போன்ற உணவுகள் பொதுவாக நாம் கேள்வி பட்டிருப்போம்.
கீரை – இதை இரவில் எடுத்து கொள்ள கூடாது. இதற்கு பல கட்டுக்கதைகள் சொல்லி இருந்தாலும், முக்கிய கரணம் இது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். சிலர் உணவை சாப்பிட்ட உடன் படுத்து தூங்க சென்று விடுவார்கள் அவர்கள் கட்டாயம் கீரைகள் எடுத்து கொள்ள வேண்டாம். சில பாரம்பரிய பழக்கப்படி மாலை 6 மணிக்கு மேல் கீரை உணவுகளை சிலர் எடுத்து கொள்ள மாட்டார்கள்
தயிர் – இது பொதுவாக இரவில் எடுத்து கொள்வதால் சளி, சைன்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். அதனால் தயிர், மோர் போன்றவற்றை இரவில் எடுத்து கொள்ள கூடாது.
அசைவ உணவு – இரவில் அசைவ உணவு எடுத்து கொள்ள கூடாது இது செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்ளும். மேலும், இது நெஞ்சு எரிச்சல், உப்புசம் போன்ற தொந்தரவுகளையும் தரும். இது தூக்கத்தை கெடுக்கும். அதனால் இரவில் முடிந்த வரை அசைவ உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம்.
கிழங்கு வகைகள் – இரவில் கிழங்கு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். இது அதிக கலோரிகளை கொண்டுள்ளது. அதனால் இது உடல் எடை அதிகமாவதற்கு வழி வகுக்கும். மேலும் இது கொழுப்பாக உடலில் சேர்ந்து விடும். கிழங்கு உணவுகளை இரவில் எடுத்து கொள்ள வேண்டாம்.
இதையெல்லாம் எடுத்து கொள்ள கூடாது. சரி என்ன உணவுகளை இரவில் எடுத்து கொள்வது நல்லது.
முடிந்த வரை ஆவியில் வேகவைத்த உணவுகள், இட்லி, இடியப்பம்,ஆப்பம் சப்பாத்தி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இது விரைவில் செரிமானம் ஆகும். மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனுடன் பழங்கள் அல்லது காய்களை எடுத்து கொள்வது , நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். என்ன தான் இருந்தாலும், இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் ஒரு 2 மணி நேரம் இடை வெளி இருப்பது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.