நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. உலகில் பல்வேறு மருத்துவ கம்பெனிகள் இந்தியாவிற்கு படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்த நீரிழிவு நோய் தான்.
நமது வாழ்வியல் முறையை மாற்றினாலே போதுமானது. முடிந்த வரை இந்த பாதிப்பு அதிகமாகாமல் , இந்த நோயின் தீவிரம் அதிகமாகாமல், குறைந்த மருந்துகளை கொண்டு இந்த நோயை பராமரிக்கலாம்.
என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.
உணவு – அதிக கார்போஹைட்ரெட் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அரசி உணவுகளை எடுத்து கொள்வதால் இதில் அதிக மாவு சத்து உள்ளது. இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தும்
பழக்கவழக்கம் – ஆல்கஹால், புகை பிடித்தல் போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இது நோயின் தீவிரத்தை அதிக படுத்தும்.
உடல் உழைப்பு – நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய கூடாது. இது இன்சுலின் வேலை செய்ய விடாமல் தடுக்கும். அதனால் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
என்ன லாம் செய்ய வேண்டும்.
உணவு – அதிக நார்சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். காய்கள், பழங்கள் , கீரைகள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் அன்றாடம் சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
உடற்பயிற்சி – தினம் ஒரு மணி நேரம் ஏதேனும் உடற்பயிச்சி செய்ய வேண்டும் . இது இன்சுலின் சுரப்பதை மேம்படுத்தும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறிப்பிட்ட அளவில் வைக்கும்.
தூக்கம் – தினம் 6 – 8 மணி நேரம் தூக்கம் அவசியம். இது உடலில் ஹார்மோன் சுரப்பை சமநிலை படுத்திகிறது.
மனஅழுத்தம் – மனஅழுத்தம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். இது அணைத்து நோய்களுக்கும் மூல காரணமாக இருக்கும். அதனால் மனா அழுத்தம் வராமல் இருக்க தினம் ஒரு 15 நிமிடங்கள், மூச்சு பயிற்சி அல்லது தியான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்