முகம் தான் உடல் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே முகத்தில் தெரிய ஆரம்பிக்கும். கண்ணிற்கு கீழே தெரியும் கருவளையம் கூட இதே தான் அதாவது, உடல் சோர்வு , மன உளைச்சல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் இருந்தால் கருவளையம் வரும். இதற்கு அதிக அளவில் செலவு செய்து கிரீம் பயன்படுத்த வேண்டாம். வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி இதை செய்தால் போதுமானது.
சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே
- தினமும் 6 – 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூக்கத்தை எதற்காகவும் சமரசம் செய்ய வேண்டாம். போதுமான அளவு தூக்கம் இருந்தாலே இது போதும் . கருவளையம் நாளடைவில் மறைந்து போகும்.
- மனதை ஓய்வாக வைத்து கொள்ள வேண்டும் இது மிகவும் அவசியம். மனதை நீங்கள் ரிலாக்ஸாக வைத்து கொள்ள இது போன்ற கருவளையம் காணாமல் போகும்.
- ஐஸ் ஒத்தடம் – ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு துணியில் மடித்து கண்ணிற்கு ஒத்தடம் கொடுப்பது மிகவும் நன்மை அளிக்கும். கருவளையம் மற்றும் கண்ணிற்கு கீழே வீக்கம் இருந்தால் அதையும் இந்த ஐஸ் கட்டிகள் குறைக்கும்.
- டீ பேக் – டீ பேக் 20 நிமிடம் சூடு தண்ணீரில் போட்டு வைத்து விட்டு, பின்னர் அதை எடுத்து பிரிஃட்ஜில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து கண்களுக்கு வைக்கவும்.டீயில் இருக்கும் ஆண்டிஆக்ஸிடெங்கள் கண்களுக்கு ஓய்வை தரும்.
- வெள்ளரிக்காய் – வெள்ளரிக்காய்யாய் வட்டமாக நறுக்கி கண்கள் மேலே வைத்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதனால், கருவளையம், கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.
- கற்றாழை – முகத்திற்கு தினம் காற்றாலை தடவலாம். இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீக்கும். . மேலும், கண்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். காற்றாலை இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மை கொண்டுள்ளது. இது மிகவும் நன்மை பயக்கும். கற்றாழை வெளிபுறக்கமாவும் பயன்படுத்தலாம். காற்றாலை ஜெல் எடுத்து சுத்தம் செய்து சாப்பிடவும் செய்யலாம். இது குடலை சுத்த படுத்தவும்,உடல் குளிர்ச்சிக்கு நல்லது.