வாழ்க்கைமுறை
முழு தானியங்கள் சாப்பிடுவதால் இத்தனை நோய்கள் குணமாகுமா ?
, இதை தினம் ஒரு வேலை உணவில் சேர்த்து கொள்வதால் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கலாம்.
நமது முன்னோர்கள் அதிகமாக எடுத்து கொண்ட உணவுகள் அனைத்தும் முழு தானியங்கள் தான். அவர்களுக்கு அன்றைய நாட்களில் அரிசி உணவு எடுத்து கொள்வது அரிதிலும் அரிதான விஷயம்.சோள சோறு , கம்பு சோறு ஆகியவற்றை எடுத்து கொண்டனர். இன்று இது போன்ற முழு தானியங்களை உணவில் எடுத்து கொள்வது பெரிய விஷயமாக இருக்கிறது. தினை,வரகு, சாமை, குதிரைவாலி , கம்பு, சோளம், கேழ்வரகு, போன்றவற்றை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள், இதை தினம் ஒரு வேலை உணவில் சேர்த்து கொள்வதால் பல்வேறு நோய்களை வராமல் தடுக்கலாம்.
- இதில் வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் இ போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. அதனால் ஊட்டச்சத்து குறைபாடுகள் வராது
- இதில் ஆண்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது.
- இதில் நார்சத்து நிறைந்து இருப்பதால் குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைய சாப்பிட ஒரு உணர்வு இருக்கும். உடல் எடை குறைபவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கும்.
- இது புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் உடலில் பிரீ ரேடிக்கல் அனைத்தும் வெளியேற்ற உதவும். உடலில் இருக்கும் கழுவுகளை வெளியேற்ற உதவும். இது போன்ற உணவுகளை எடுத்து கொள்வது நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.
- இந்த உணவுகள் செரிமான பிரச்சனைகளை சரி செய்யும். பெருங்குடல் இயக்கத்தை சீராக வைக்க உதவும். மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும்.
- இதய நோய் வராமல் பாதுகாக்கும். உயர் இரத்த அழுத்தம், உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இரத்த அழுத்தம் சீராக வைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
- பக்க வாதம் வருவதற்கு முக்கிய காரணம் இதய நோய் தான் முக்கிய காரணமாக இருக்கும். முழு தானியங்கள் எடுத்து கொள்ளும் போது இதய நோய் வராமல் இருக்கும் போது , பக்க வாதமும் வராது.
- மேலும் முழு தானியங்களை தனியாக அரிசியாக சமைத்து சாப்பிடலாம். மேலும், இட்லி, தோசை , பணியாரம், பொங்கல் என அனைத்தும் இந்த தானியங்களை கொண்டு சமைத்து சாப்பிடலாம்.