அருகம்புல் சாறு தினம் எடுத்து கொள்வதால் உடலுக்கு குளிர்ச்சியாகவும், திரித்தோஷங்களும் சமநிலையில் இருக்கும். அருகம் புல்லை எடுத்து அப்டியே மிக்ஸியில் அரைத்தும் குடிக்கலாம். அல்லது அருகம்புல் பொடி தயார் செய்து அதை வெந்நீரில் கலந்து எடுத்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் – பொதுவாக சர்க்கரை நோய் இருப்பவர்கள் உடலில் சத்துகள் குறைவாக இருக்கும். அவர்களுக்கு இந்த அருகம்புல் சாறு தினம் எடுத்து கொள்வது, உடலுக்கு நன்மை தரும். மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் , இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை செயல்பட ஆரம்பிக்கும்.
நச்சுக்களை வெளியேற்றும். – அன்றாடம் நமது உடலில் பல்வேறு காரணங்களால் நச்சுக்கள் சேரும். அந்த நச்சுக்களை வெளியேற்ற இந்த அருகம்புல் சாறு உதவும். இந்த நச்சுக்கள் இரத்தத்தில் பிரீராடிக்கல் ஆக இருக்கும். தினம் இந்த அருகம்புல் சாறு இரத்தத்தை சுத்திகரிக்கும். அருகம் புல் சாறு , அருகம் புல் பொடி தண்ணீர் என எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.
சிறுநீரை அதிக படுத்தும். – குறைவாக தண்ணீர் குடிப்பவர்கள், மற்றும் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருப்பவர்களுக்கு இந்த அருகம் புல் எடுத்து கொள்வது, சிறுநீர் அதிகமாக வெளியேற உதவும். மேலும், சிறுநீரகத்தில் இருக்கு கற்கள் வெளியேற இந்த அருகம்புல் சாறு உதவும்.
ஜீரண மண்டலம் – சிலர்க்கு உணவு முழுமையாக செரிமானம் ஆவதில் பெரிய சிக்கல் இருக்கும். எடுத்து கொள்ளும் உணவானது, முழுமையாக செரிமானம் அடைந்து, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்த்து இரத்தத்தில் அணைத்து உறுப்புகளையும் சென்றடையும். இந்த வேலையை அருகம்புல் துரிதப்படுத்தும்.
எலும்புகள் வலு பெற – அருகம்புல் எடுத்து கொள்வது, எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும். வயதானால், எலும்பு தேய்மானம் அடைத்து சத்துகள் குறைந்து எலும்பு தேய்மான நோய், எலும்பு அடர்த்தி குறைவது போன்ற பிரச்சனைகள் வரும். இது வராமல் இருக்க இந்த அருகம்புல் ஜூஸ் எடுத்து கொள்ளலாம்.
இப்படி உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளையும், பலப்படுத்துவதில் அருகம்புல் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் எண்ணற்ற ஊட்டசத்துகள் நிறைந்து இருக்கிறது. அனைவரும், கிடைக்கும் சமயங்களில் அருகம்புல் சாறு எடுத்து கொள்ள வேண்டும்.