2019-2020 ஆண்டின் ஆய்வின் படி இந்தியாவில் இருக்கும் 14 மாநிலங்களில், 50% பெண்கள் இந்த இரத்த சோகை குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்த சோகை என்றால்,உடலில் இரும்பு சத்து குறைவாக இருப்பதால், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்து இருக்கும். இதனால் இரத்த அணுக்கள் குறையும். இரத்தம் குறைவாக இருந்தால், உடலுக்கு பல்வேறு தீமைகள் வரும். குறிப்பாக தலை சுற்றல், உடல் வலி, அதீத சோர்வு, மற்றும் மூச்சு விடுவதில் சிரமம், உடல் சோம்பல், மற்றும் மாதவிடாய் சுழற்சியில் பிரச்னை போன்றவை வரும். மேலும் இந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் விட்டால் உயிர் இழக்கும் அபாயம் ஏற்படும்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் காலத்தில் 30-50 மிலி இரத்தம் வெளியேறும். அந்த நேரத்தில் போதுமான சத்து மிக்க இரும்பு சத்து உள்ள உணவுகள் எடுத்து கொள்வதன் மூலம், உடலில் இரத்த இழப்பை சரி செய்ய முடியும்.
கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் நேரங்களில் அதிகமாக இரும்பு சத்து தேவைப்படுகிறது. இந்த நேரங்களில் என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும் என்ற தெரியாமலும் நிறைய இரத்த சோகை பிரச்னை ஏற்படுகிறது.
ஹார்மோன் குறைபாடு, மாத விடாய் சுழற்ச்சி மாறுபாடு , என உடல் குறைபாடுகளால், இந்த இரத்த சோகை பிரச்சனை வரும்.
போதுமான சரிவிகித உணவு எடுத்து கொள்ளாமல் ,இருப்பதும், இந்த ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு காரணமாக இருக்கும்.
இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்.
இரும்பு சத்து மிக்க உணவுகள், அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஈரல், பேரிட்சை பழம் , அத்தி பழம் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். இதனுடன் நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய வற்றையும் சேர்க்க வேண்டும். உணவில் மாற்றம் கொண்டு வருவது, பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில்ஊட்டச்சத்து மாத்திரைகள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.
கருப்ப காலம், தாய்ப்பால் ஊட்டும் நேரம் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இந்த ஊட்டச்சத்து மாத்திரைகள் அவசியம். திருமணம் ஆனதில் இருந்து ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்து கொள்வது, மிகவும் நல்லது.