ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் 1 முதல் 7 ஆம் தேதி வரை தாய் பால் வாரமாக அனுசரிக்க படுகிறது. பிறந்த குழந்தை முதல் 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சி மற்றும் தாயின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் படி, முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பின் இரண்டு வருடத்திற்கு மற்ற உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம்
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியம் மேம்படும். தாய்ப்பால் கொடுப்பதால், பிரசவத்தின் போது விரிவடைந்த கருப்பப்பையானது தாய் பால் எந்த அளவிற்கு கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு சுருங்கும். ஹார்மோன்கள் சுரப்பது முறைப்படுத்தப்படும்.
குழந்தைகளுக்கு உடனடியாக கிடைக்க கூடிய உணவாகவும், மேலும் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவாகவும் இது இருக்கும். குழந்தைகள் மூளை வளர்ச்சி மேம்படும். மேலும் IQ அதிகமாகும். முதல் ஆறு மாதத்திற்கு தாய் பால் மட்டுமே சிறந்த மருந்தாகவும், சிறந்த தடுப்பூசியாகவும் இருக்கும்.
தாய் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும். உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.
தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அதாவது, ஊட்டச்சத்து மிக்க காய்கள், பழங்கள், உளர் பழங்கள் நிறைந்த உணவு, புரத சத்து மிக்க அசைவ உணவு , தினம் 3 லிட்டர் தண்ணீர் என சரிவிகித உணவு எடுத்து கொள்வது, குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்க உதவியாக இருக்கும். மேலும், 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் தாய் பாலில் இருந்து கிடைக்கிறது.
மொத்த பிரசவத்தில் 88% மருத்துவமனைகளில் நடக்கிறது. இதில் 51% மட்டுமே குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய் பால் தருகின்றனர். இதில் 61.9% குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதத்திற்கு தாய் பால் கிடைக்கிறது. 56 % குழந்தைகளுக்கு 6-8 மாதங்களில் முழுமையான ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கிறது.
தாய் பால் முதல் ஒரு மணிநேரத்தில் தருவது கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கோலோஸ்டரும் எனும் தாய்ப்பால் கிடைக்கும். இது குழந்தைக்கு தேவையான ஆண்டிபாடிகள் நிறைந்த பாலாகும். இது பல தொற்று வியாதிகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு வராமல் இருக்க குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் தருவது முக்கியம்.