நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து , நடிகர் அஜித்குமார், இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்து வலிமை திரைப்படம் தொடங்கப்பட்டது.
கொரோனா காரணமாக திரையரங்கில் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் அரசியல்வாதிகள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பினை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது . நேற்றிரவு முதல் வலிமை திரைப்படத்தினை காண ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று அதிகாலை 4மணிக்கு வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இதையெடுத்து ரசிகர்கள் ஒவ்வொரு திரையரங்கு முன்பும் பட்டாசு வெடித்தும், மேள தள முழங்க கொண்;டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நடிகர் அஜித் கட்அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்து தங்களது உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.