Site icon ழகரம்

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்திருந்தது. அதனால் பொங்கலுக்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் வலிமை திரைப்படம்வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version