அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் தற்போது ‘வலிமை’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 @UpadhyayHema @mynameisraahul @Gopuram_Cinemas @SonyMusicSouth#Valimai pic.twitter.com/gcMckY8Pc1
— Boney Kapoor (@BoneyKapoor) January 6, 2022