Site icon ழகரம்

உதயநிதி – மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் ….!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்துக்கு ‘மாமன்னன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாருக்கிறது.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று முதல் சேலத்தில் தொடங்கப்பட்டது.

‘மாமன்னன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘மாமன்னன்’ பாடல்கள் அத்தனையும் யுகபாரதி எழுதவுள்ளார்.

 

Exit mobile version