ஒரே நாளில் இந்து கோவிலுக்கும், முஸ்லீம் தர்காவுக்கும் சென்ற ரஜினிகாந்த்!
Editor Zhagaram
ஒரே நாளில் இந்து கோவிலுக்கும், முஸ்லீம் தர்காவுக்கும் சென்ற ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாள் கடந்த திங்களன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து ரஜினிகாந்த் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரே நாளில் இந்து கோவிலுக்கும், முஸ்லீம் தர்காவுக்கும் சென்று ரஜினிகாந்த் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு, விஷால் நடிக்கும், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.