Site icon ழகரம்

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சொந்தமான இடங்களில் ஐ.டி. சோதனை….!

சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் சோதனை நடத்தினர். இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் காலை முதல் எல்ரெட் குமாருக்குச் சொந்தமாக, சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு, அவரது கட்டுமான நிறுவனம், சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

இதேபோல, எல்ரெட் குமாரின் நண்பர் மற்றும் தொழில் பங்குதாரர் எனக் கருதப்படும், ஃபைனான்சியரான புரசைவாக்கம் சுரேஷ் லால்வானியின் வீடு, ஃபைனான்ஸ் நிறுவனத்திலும் 2-வது நாளாக நேற்று சோதனை நடத்தப்பட்டது. மேலும், அவரது மகன் வீடு மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version