- கல்கி எழுதிய பொன்னியின்செல்வன் என்ற வரலாற்று புனைவு நாவலை LYCA நிறுவனம் தயாரிப்பில், மணிரத்தினத்தின் இயக்கத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு என தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்து வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற…, இன்றும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1
- இந்த திரைப்படத்தில் இராஜராஜ சோழன் வரலாற்றை மையமாகக்கொண்டு கதை உருவாக்கப்பட்டிருக்கும், முழுமையான வரலாறு இல்லை என்றாலும் தமிழ் மன்னர்களின் வரலாற்றை மிகப்பெரிய திரைப்படமாக எடுத்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றது. பொன்னியின்செல்வன் நாவலை படித்த வாசிப்பாளருக்கும் மணிரத்தினத்தின் இந்த திரைப்படம் நிறைவைக் கொடுத்தது.
- இராஜராஜ சோழனின் பெயரைப் பயன்படுத்தி திரைப்படமாக்கி வெற்றி பெற்றதோடு நின்றுவிடாமல், நேற்று இராஜராஜசோழனின் சதய விழாவிற்கு LYCA தயாரிப்பு நிறுவனமும், நடிகர் விக்ரம், நடிகர் ஜெயம்ரவி அவர்களும் தங்களது அன்பையும், மரியாதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
- LYCA தயாரிப்பு நிறுவனம் ராஜராஜ சோழனுக்கு சதய விழா வாழ்த்தைத் தெரிவிக்கும் விதமாக ஒரு புகைப்படத்தையும், வரலாற்றை அறிந்தவர்கள் பேசும் ஒரு காணொளியையும் வெளியிட்டுள்ளது. அதை கரிகாலச்சோழனாக நடித்த நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- நடிகர் ஜெயம் ரவி, இராஜ ராஜசோழனுக்கு சதய விழா.இவரது புகழையும், பெருமையும் போற்றி, அடுத்த தலைமுறைக்கு பகிர்ந்து பெருமை கொள்வோம். பொன்னியின் செல்வனாக “ திரையில் உம்மை பிரதிபலிக்க” நான் என்ன தவம் செய்தேனோ…!! என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இராஜராஜ சோழனின் சதய விழாவிற்கு மரியாதையும் அன்பையும் பகிர்ந்துள்ளார்.
- கதை திரைப்படத்தோடு நின்றுவிடாமல் நிஜத்திலும், பொன்னியின் செல்வன் திரைப்பட குழுவினர் வரலாற்றை பேசியிருப்பதை தமிழ் திரையுலக ரசிகர்கள் வலைதளங்களில் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.