Site icon ழகரம்

விஸ்வரூபம் பட நடன இயக்குனர் பண்டிட் பிர்ஜு காலமானார்…..!

இந்தியாவின் புகழ்மிக்க கதக் நடன கலைஞர்களில் மிக முக்கியமானவர் பண்டிட் பிர்ஜு மஹராஜ்.

திரையுலகிலும் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்து வெளிவந்த விஸ்வரூபம் திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்னை காணாது நான் இன்று நானில்லையே” என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். இப்பாடலுக்காக பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்களுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் பண்டிட் பிர்ஜு மஹராஜ் அவர்கள் நேற்றிரவு திடீரென காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த பண்டிட் பிர்ஜு மஹராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 83.

Exit mobile version