Site icon ழகரம்

2021 ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியீட தமிழ் படங்களின் வரிசை

கொரோனாபெருந்தொற்றின் காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில், அதிகமான படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் படம் கூட இதில் வெளியாகி உள்ளது. அமேசான், நெட் பிலிக்ஸ்  ஜி 5 தளங்களில் வெளியாகி உள்ளது.

 

மாறா – மலையாள படம் சார்லி ரீமேக் தான் தமிழில் மாறா என வெளி வந்தது. இதில் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முன்னாடி கதாபாத்திரத்தில் நடித்தனர். திலீப் குமார் இயக்கத்தில், ப்ரதீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்ப இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது

பூமி – இது ஜெயம் ரவி யின் 25வது படம் ஆகும். இதில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் முன்னணி காதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். லக்ஷ்மன் இயக்கத்தில், சுஜாத்தா விஜயகுமார் தயாரிக்க, இசையமைப்பாளர் இம்மான் இசையமைத்துள்ளார். இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது

தீனி – அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் உருவான காதல், நகைச்சுவை திரைப்படம். இதை அனி.ஐ.வி. சசி இயக்கத்தில், பி.வி.எஸ்.என். பிரசாத் தயாரிக்க, இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். இது ஜி 5 தளத்தில் வெளியானது

டெடி – ஆர்யா மற்றும் சாயீஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில், கே இ ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜகமே தந்திரம் – தனுஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், சஞ்சனா நடராஜன் என பலர் நடித்திருக்கும் திரில்லர் படம். இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ் சஷிகாந்த் தனது வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இது நெட் பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது.

இது போன்று முன்னணி கதாநாயகர்களின் படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாக தொடங்கி விட்டது. இது தமிழ் திரையுலகின் புதிய மாற்றம். இந்த ஊரடங்கு காலத்தில் அனைவர்க்கும் பழகிய நியூ நார்மல் ஆகி விட்டது.

 

Exit mobile version