நவரசா படத்தின் வருவாய் கொண்டு 12000 குடும்பங்களுக்கு உதவி செய்ய பட்டது.
இந்த படம் சமீபத்தில் நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியானது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடித்தனர்.

நவரசா என்ற புதிய ஆந்தாலஜி , மணி ரத்னம், மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசனும் இணைத்து தயாரித்தனர். இந்த படம் சமீபத்தில் நெட் பிலிக்ஸ் தளத்தில் வெளியானது. இதில் பல முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டு நடித்தனர். இந்த படத்தில் சூர்யா, ரஹ்மான் போன்ற நடிகர்கள் கலந்து தனது நடிப்பை வெளிப்படுத்தினர். 9 உணர்வுகளை மையமாக கொண்டு 9 கதைகளாக தயாரிக்க பட்ட இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அங்கீகரிக்க படவில்லை எனினும், இந்த படத்தின் மூலம், கிட்டத்தட்ட 12,000 திரையுல பணியாளர்களின் குடும்பங்களுக்கு உதவ முடிந்தது என தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஒன்பது இயக்குனர்களின் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக நவரசா வெளிவந்தது. இந்த ஆந்தாலஜி கொரோனா பேரிடர் காலங்களில், திரையுலகில் பணியாற்றிய குடும்பங்களுக்கு உதவும் விதமாக எடுத்தனர். அதனால், இதில் நடிப்பதற்கும் இயக்குவதற்கும், யாரும் சம்பளம் வாங்கவில்லை.இதனால், மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் இணைத்து அனைவர்க்கும் நன்றி தெரிவித்தனர்.
எங்களுடைய வேண்டுகோளுக்கு இணங்க கூட்டாக அனைவரும் தங்களது நேரம் மற்றும் பங்களிப்பை அளித்ததற்கு எங்களது உளமார்ந்த நன்றி. உங்களது இந்த பேராதரவால் திரை துறையை சேர்ந்த 12,000 குடும்பங்களின் வீட்டு தேவைகளுக்கு நம்மால் உதவ முடிந்தது. உதவி என்பதையும் தாண்டி அவர்களுக்கு கலை துறையினருக்கு தங்களது அன்பையும் நன்றியையும் அளிக்க முடிந்தது. பெருமையில், நன்றியுணர்ச்சியின் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். நீங்கள் தான் .. நீங்கள் தான் எங்கள் மகிழ்ச்சிக்கு காரணம். மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்கிறோம். என மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசனும் கூட்டாக அறிவித்துள்ளனர்