Site icon ழகரம்

வெளியானது வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ ஃபர்ஸ்ட் லுக்…!

2007-இல் வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி பிறகு முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வெங்கட் பிரபு.

சமீத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படத்திற்கு மன்மதலீலை என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 

Exit mobile version