Site icon ழகரம்

எலும்பும் தோலுமாய்.. ஆளே அடையாளம் தெரியாமல் வெளியான விஜயகாந்த் புகைப்படம்….!

நடிகர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருக்கிறார். பொது நிகழ்வில் கலந்துகொள்வதோ, பேசுவதோ இல்லை. கட்சி அலுவலகத்துக்கு மட்டும் எப்போதாவது அழைத்து வரப்படுகிறார்.

இந்நிலையில், விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

திமுகவுக்கு அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வந்த தேமுதிக 35 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது.

35 வேட்பாளர்களும் தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருப்பது வேதனையளிப்பதாக கூறுகின்றனர் தேமுதிக தொண்டர்கள். கட்சி தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

Exit mobile version