Site icon ழகரம்

திருமண வாழ்விலிருந்து பிரிகிறோம்: தனுஷ் – ஐஸ்வர்யா அறிவிப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் மனமுறிவு திரைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2004-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.தனுஷ் 22 வயதை எட்டியபோது 24 வயது அடியெடுத்து வைத்திருந்த ஐஸ்வர்யாவை மணம் முடித்தார். ஐஸ்வர்யாவை விட இரண்டு வயது இளையவரான தனுஷ், ரஜினியின் மகளை திருமணம் செய்துகொண்டது அன்றைய நாளில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

அண்மையில் பிறந்தநாள் விழா ஒன்றில் ஐஸ்வர்யாவிற்காக தனுஷ் பாடும் வீடியோ சமூக வளைதளத்தில் பரவலாக பகிரப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இதற்கிடையே ஒரு நடிகையுடன் தனுஷ் அதிக நெருக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே செய்தியை ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்கள் மணமுறிவை உறுதி செய்துள்ளனர்.

ஏறத்தாழ 18 ஆண்டுகள் நீடித்த பந்தம் நிறைவடைவதாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தி, திரைத்துறையிலும் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா – தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா – நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CY1uy4UPiAy/

 

Exit mobile version