கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள், முன்னணி கதாபாத்திரங்கள் படங்கள் என அனைத்தும், ஓடிடி தளத்தில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதம், சுதந்திர தினம் மற்றும் ஓணம் போன்ற விழா காலங்களில் விடுமுறை தினங்கள் அதிகமாக இருக்கிறது. மேலும், திரையரங்குகள் தொடர்ந்து மூடி இருக்கும் நிலையில் இந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் படங்களின் தொகுப்பு இங்கே
நெற்றிக்கண் – நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் ஏற்கனவே ஓடிடி தளத்தில் வெளியானது அதற்கு பிறகு நெற்றிக்கண் படம் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியிடப்படும். மேலும், இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரிஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்., ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குருதி – ப்ரித்வி ராஜ் நடித்து இருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளிவர இருக்கிறது. ஓணம் பண்டிகை இந்த மாதம் 24ஆம் தேதி வருகிறது. இது அமேசான் ப்ரைமில் வெளிவருகிறது. மனு வாரியர் இயக்கத்தில் இப்படம் வெளி வர இருக்கிறது. ஓணம் பண்டிகைக்கு இந்த படம் வெளிவருகிறது.
செர்ஷா – கார்கில் நாயகன் விக்ரம் பத்ராவின் சுய சரிதை கொண்டு எடுக்க பட்ட படம் . இது அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகிறது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் விஷ்னுவர்தன் இயக்கி இருக்கிறார். ஹிந்தியில் இது அவரின் முதல் படம் .
புஜ் – தி ப்ரைட் ஆஃப் இந்தியா – இது இந்தியா – பாகிஸ்தான் போரின் போது நடந்த சம்பவத்தை வைத்து எடுக்க பட்ட படம். இது ஆகஸ்ட் 13 ல் டிஸ்னி + ஹாட்ஸ்டார் வெளிவருகிறது. இதில் ஜய் தேவ்கன், சொனாக்ஷி சின்ஹா, சஞ்சய் தட் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அபிஷேக் டுதையா இப்படத்தை இயக்கி இருக்கிறார்.