அமீர் இயக்கும் புதிய படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீர் இயக்கவுள்ள இந்த படத்துக்கு வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். அமீர் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார். இதனை அமீர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இப்படத்தில் ஆர்யாவின் சகோதரர் சத்யா, சூரி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு யுவன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்துக்கான டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.