Site icon ழகரம்

முதலில் தமிழ்மொழியில் திரைப்படம் எடுக்கும் தோனி…!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான மகேந்திரசிங் தோனி  தயாரிப்பு நிறுவனத்தை  அக்டோபர் 24 அன்று தொடங்கியுள்ளார்.  அவரின் முதல் தயாரிப்பு திரைப்படம் தமிழில் உருவாகிறது. Dhoni Entertainment என்ற பெயரில் அவரின் மனைவி திருமதி.சாக்ஷி சிங் தோனியின் கதை கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் திரைப்படத்தை அதர்வா-தி-ஆர்ஜின் எனும் முப்பரிமாண வடிவிலான கிராபிக்ஸ் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நாவல் ஒரு புதிய யுக கிராபிக்ஸ் நாவல் மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்படும்.

 தமிழில் இதுமட்டுமின்றி  அறிவியல் புனைவுக்க்கதை, குற்றவியல், நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பலவகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தைக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவோம் தயாரிக்கவும் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடனும்  Dhoni Entertainment நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

முதல் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்று இருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், திருமதி.சாக்ஷி சிங் தோனி  எழுதிய கதைக்கருவை படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணர முடிந்தது புத்தம் புதிதாய் இருந்த இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வூட்டி சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன், இந்த  கதைக்கருவை திரைப்படம் ஆகும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதை பெருமையாக கருதுகிறேன் என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார் மேலும் இந்த பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்த குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்கு கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது என்று ரமேஷ் தமிழ்மணி கூறுகிறார்.

 Dhoni Entertainment வணிகப் பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா பேசுகையில், கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் வணிகம் என்பது விரிவாக்கம் அடைந்து இருக்கிறது. எல்லைகளற்ற அதாவது பிராந்திய சினிமாவிற்கும் இந்தி சினிமாவிற்கும் இடையேயான விவாதம் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள் வடமாநிலங்களில் சமமாக கொண்டாடப்படுவதால்  Dhoni Entertainment தன்னை மொழிசார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை நமது நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை அர்த்தமுள்ள கதைகளின் மூலம் சென்று அடைவதே எங்களின்  முதன்மை நோக்கம், எங்களின் முதல்படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும் பல மொழிகளில் வெளியாகும் என்கிறார்.

 Dhoni Entertainment படைப்புத்திறன் பிரிவு தலைவர் பிரியன்ஷி சோப்ரா பேசுகையில் கதைதான் நாயகன் என நாங்கள் நம்புகிறோம்  Dhoni Entertainment’ல் வித்தியாசமான மற்றும் அழுத்தமான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். பாரம்பரிய கலாச்சாரத்தை அதற்கேற்ற கதாபாத்திரங்களும், உண்மையான சித்தரிப்புகளும், சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் படைப்புகள் திரைப்படங்களாக உருவாகும்போது பார்வையாளர்களின் இதயத்தை வெல்லும் இதைப்போன்ற யதார்த்தமான படங்களை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்குவதே எங்களது நோக்கம் என்கிறார்.

நடிகர் விஜய்யை சென்னையில் மகேந்திரசிங் தோனி சந்தித்த பிறகு, தமிழில் முதல் திரைப்படம் விஜய்யை வைத்து தயாரிப்பதாகப் பேசப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கதையில் நடிகர் ஹரிஷ்கல்யாண் மற்றும் பிரியங்காமோகன் நடிக்கயிருப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version