சினிமாகட்டுரைகள்
சர்தார் திரைப்படத்தில் பேசப்படும் தனியார்மயமாகும் தண்ணீர் அரசியல் உண்மையா….??
பாகிஸ்தான் சீனா நாடுகள்தான் பிரச்சனையா…??
பாகிஸ்தான் சீனா நாடுகள் அதுதான் பிரச்சனையா…??
சர்தார் திரைப்படத்தில் பேசப்படும் தனியார்மயமாகும் தண்ணீர் அரசியல் உண்மையா….??
நீர்இன்று அமையாது உலகு -திருவள்ளுவர்
- தனியார்மயமாக்கல் என்பது பொதுத்துறை சேவையை தனியார் நிறுவனங்களிடம் நீர் விநியோகத்தை வழங்க பயன்படுத்தப்படும் உறுதியாகும். தண்ணீரை வணிகமயமாக்கல் இதன் முக்கிய நோக்கமாகும்
- தண்ணீர் மனிதனின் தேவை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமான உயிர்தேவை என்பதால் தண்ணீரை தனியார்மயமாக்குதல் மனித உரிமை மீறல் மட்டுமன்றி அனைத்து உயிர்களின் உரிமையையும் மீறும் செயலாகும். தனியார்மயமாக்கல் அரசின் அதிகாரத்தை இழப்பதோடு உலக மக்களின் பொருளாதார இழப்பு வழிவகுக்கும்.
- நீர் ஆதாரங்கள் அரசுகளின் கைகளில் இருக்கும்போதே பல்வேறு நாடுகளுக்கும் ஒன்றியத்தின் மாநிலங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் நிலையில் தண்ணீரை தனியார்மயமாக்குதல் பெரும் போராட்டங்களை ஏற்படுத்த வழிவகுக்கும்.உலகின் பல்வேறு நாடுகளில் தண்ணீரை தனியாரிடம் ஒப்படைத்த பின்பு பல்வேறு போராட்டங்களும் உயிரிழப்புகளும் நடந்துள்ளது.
- மெக்சிகோ நகரில் பொது துறை வழங்கிய தண்ணீர் சரியான முறையில் கிடைக்கவில்லை என்பதாலும், தண்ணீர் இழப்பு ஏற்பட்டாலும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தனியார்மயமாக்கப்பட்டது. 1994 க்கு பிறகு மெக்ஸிகோ நகரத்தில் தண்ணீர் தேவை தனியார்மயமாக்கல் பொதுத்துறை தனியார் துறைக்கும் இடையேயான ஒப்பந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் தண்ணீர் வினியோகம் செயலிழந்தது.
- பொலிவியா 1999ஆம் ஆண்டு கொச்சபாம்பா நகரில் உள்ள தனது நீர் விநியோகத்தை ஒரு பன்னாட்டு தனியார் அமைப்பான செம்பா’விற்கு தனியார்மயம் ஆக்கியது. அதன்பிறகு $2.5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது அதன் விளைவாக கொச்சபாம்பா நீர் போர் 1999 முதல் 2000 வரை நடைபெற்றது இதில் பெரும் வன்முறை வெடித்தது . பொலிவியாவில் அணைகள் கட்டுமானம் மற்றும் கடன் காரணமாக செலவுகள் அதிகரித்தன, நான்கு நாட்களுக்கு நகரத்தை மூடிய போராட்டங்கள் நடைபெற்றது.
- கொச்சபாம்பா நீர் போர் காரணமாக அவசரகால நிலை அறிவித்தது அரசு அதன்பின் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து பொலிவியாவை விட்டு வெளியேறினார்.
- தென்னமெரிக்காவில் போராட்டங்கள் நடைபெற்றன சூயஸ் நிறுவனம் பின்வாங்கியது சூரியனை வழங்கிய 500 சதவிகிதம் தண்ணீர் கட்டண உயர்வை எதிர்த்து நுகர்வோர் தெருக்களில் போராட இறங்கினர். தென்னாப்பிரிக்கா தண்ணீரை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் 200 மக்கள் இறந்தனர்.
- தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கை ஏற்றுக் கொண்ட பின்பு நாட்டில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதே பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை கையில் எடுத்துள்ளது. டெல்லி பெங்களூர் கொல்கத்தா தொடங்கி தற்போது தமிழகத்தின் கோவையிலும் குடிநீரை தனியார் வினியோகிக்கும் சந்தையை கைப்பற்றியுள்ளது சூயஸ். 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் என்ற பெயரில் தண்ணீரில் தனியாரிடம் ஒப்படைக்கிறது அரசுகள்.
- உலகின் பல்வேறு நாடுகள் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவிக்கும் அதேநிலையில் வறட்சியான நாடுகள் மக்களின் அடிப்படை தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இந்திய நாடு முழுவதும் ஒவ்வொரு நகரங்களும் குடிநீர் வினியோகம் தனியார்மயமாதல் பின்னாளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.
- சமீபத்தில் வெளியான சர்தார் திரைப்படத்தில் இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனாவால் தண்ணீர் தனியார்மயமாகும் என்பது போலவும், அதனால் பிற்காலத்தில் தண்ணீர் வணிகத்தால் சிக்கல் ஏற்படும் என்றும் காட்டப்பட்டுள்ளது ஆனால் உண்மையில் மேற்கத்திய நாடுகளில்தான் தண்ணீர் வணிகம் திணிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இனிவரும் காலங்களிலும் மேற்கத்திய நாடுகளால்தான் தண்ணீர் வணிகம் திணிக்கப்படும், திணிக்கப்பட்டிருக்கிறது என்பதே தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை…!!