
தமிழக அரசு, பொங்கல் பரிசு தொகுப்பு அறிவித்தபடி முறையாக வழங்கபடவில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 21 பொருட்கள் தருவதாக அறிவித்த நிலையில் பொருட்கள் முழுமையாக வழங்கப்படவில்லை.
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற வெல்லத்தை வழங்குவது கண்டிக்கத்தக்கது. பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்பட்டும் வருகிறது என்றார்.
பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்கள் அனைத்தும் நெகிழியில் உள்ளன. அதே போல் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஹிந்தி எழுத்துக்கள் பொரிக்கப்பட்ட, வடமாநிலத்தில் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வாங்கி பொதுமக்களுக்கு தரமற்ற முறையில் வினியோகிக்கப்படுகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
இந்த ஆண்டு வேட்டி சேலை வழங்கப்படவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு கொரோனா பரவலை சரியான வழியில் தடுக்க தவறிவிட்டது. கொரோனா பாதுகாப்புக்கு ஏற்கனவே வாங்கி உபகரணங்களை தான் இப்போது பயன்படுத்தி வருகிறார்கள் என கூறியுள்ளார்.