கட்டுரைகள்

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?

புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலின் உயிர் என்பது ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என்பதில் தான் உள்ளது.இன்று வரை அவருடைய மர்ம மரணம் புரியாத புதிராக தான் உள்ளது.சோழ வரலாற்றில் பல மர்ம மரணங்கள் நடந்துள்ளது.உதாரணமாக ஆதித்த கரிகாலன் தந்தை சுந்தர சோழன் மரணமாக இருக்கட்டும்,அரிஞ்சய சோழன் மரணமாக இருக்கட்டும் இவையெல்லாம் இன்றும் விடை தெரியாத மர்ம மரணங்களாக உள்ளன.இத்தனை மர்ம மரணங்கள் இருக்க ஆதித்த கரிகாலன் மர்ம மரணம் மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம் பெறுகிறது.ஆதித்த கரிகாலன் மர்ம மரணத்தில் உள்ள தனித்துவம் தான் என்ன என்பதை குறித்து தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

 

ஆதித்த கரிகாலன் மர்ம மரணத்தில் சந்தேக வளையத்திற்குள் மூன்று பேர் வருகிறார்கள்.முதலாமவர் உத்தம சோழன்,இரண்டாமவர் ஆதித்த சோழனின் சகோதரர் ராஜராஜ சோழன் மூன்றாமவர் பாண்டியர்கள்.இவையெல்லாம் தெரிந்து கொள்ள ஆதித்த கரிகாலனின் தந்தை சுந்தர சோழன் குறித்து பார்க்க வேண்டும்.முதலாம் பராந்தக சோழனின் புதல்வர்கள் தான் கண்டராதித்ய சோழன் மற்றும் அரிஞ்சய சோழன்.பராந்தக சோழனிற்கு பிறகு சோழ பேரரசை ஆண்டவர் கண்டராதித்ய சோழன்.அவருக்கு பிறகு அவரது புதல்வரான உத்தம சோழன் தான் அப்போதிருந்த நடைமுறைப்படி ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் உத்தம சோழனிற்கு வயது குறைவாக இருந்த காரணத்தால் கண்டராதித்ய சோழனின் சகோதரர் அரிஞ்சய சோழன் அரசராக பொறுபேற்றார்.அரிஞ்சய சோழனிற்கு பிறகு உத்தம சோழன் அரசராக பதவி ஏற்றிருக்க வேண்டும்.அனால் அவரது வயது குறைவின் காரணமாக அரிஞ்சய சோழன் மகனான சுந்தர சோழன் அரசரானார்.இதுவரை குழப்பமில்லாமல் சென்ற சோழ ராஜ்ஜியம் சுந்தர சோழன் தனது மகன் ஆதித்ய கரிகாலனை இளவரசனாக அறிவித்த பிறகு சர்ச்சை கிளம்பியது.இந்த சர்ச்சை தான் ஆதித்த காரிகாலன் மரணத்தின் முதல் புள்ளி.வீரபாண்டியன் என்ற மன்னனை ஆதித்த கரிகாலன் கொன்றது  ஆதித்த காரிகாலன் மரணத்தின் இரண்டாவது புள்ளி.

சந்தேக வளையத்திற்குள் வரும் முதல் நபர் உத்தம சோழன்.இவர் தான் கொலை செய்தார் என்று சோழ வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்த்ரி எழுதினார்.ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவாக பார்க்கப்படுகிறது.இதற்கான காரணமாக சொல்லபடுவது.உத்தம சோழனின் இயற்பெயர் மதுராந்தகன்.அதே பெயரை தான் ராஜராஜ சோழன் தனது மகனான ராஜேந்திர சோழனுக்கு வைத்தார்.தன் சொந்த சகோதரனை உத்தம சோழன் கொலை செய்திருந்தால் உத்தம சோழனின் இயற்பெயரை தனது மகனிற்கு எவ்வாறு வைத்திருப்பார்?இதன் மூலம் உத்தம சோழன் ஆதித்ய கரிகாலனை கொன்றார் என்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று தெரிகிறது.

சந்தேக வளையத்திற்குள் வரும் இரண்டாவது நபர் ராஜராஜ சோழன்.தன் அண்ணனை வீழ்த்தினால் தான் அரசராகலாம் என்று ராஜராஜன் ஆதித்ய சோழனை கொன்றார் என்ற கருது உலா வருகிறது.அதற்கான வாய்ப்பு மிக குறைவு என்று தான் பார்க்கபடுகிறது.உத்தம சோழன் பெயரை தன் மகனுக்கு சூட்டியது ஒரு காரணம் என்றால்,மேலே கூறிய கருத்தின் படி பார்த்தாலும் அதற்கான வாய்ப்பு குறைவு தான் என்று தோன்றுகிறது.காரணம் அரச பதவிக்காக தன் அண்ணனை ராஜராஜ சோழன் கொலை செய்திருந்தால்,அதற்கு பின்னர் அவர் தான் அரசராகியிருக்க வேண்டும்,மாறாக உத்தம சோழன் தான் அரசராக பதினைந்து ஆண்டுகள் இருந்தார்.இத்தகைய காரணங்களால் தான் ராஜராஜ சோழன் ஆதித்ய கரிகாலனை கொலை செய்திருக்க கூடிய வாய்ப்பு மிக குறைவு என்று கருதப்படுகிறது.

சந்தேக வளையத்திற்குள் மூன்றாவதாக வர கூடிய நபர்கள் பாண்டியர்கள்.பாண்டியர்களில் குறிப்பிட்ட இந்த மூவர் தான் ஆதித்த கரிகாலனை கொலை செய்திருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.சோமன்,ரவிதாசன்,பரமேஸ்வரன் ஆகிய மூவர் தான் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.அதற்கான சான்றுகளை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ள உடையார்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள அனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டில் இந்த மூவர் கொலை செய்ததற்கான குறிப்பு உள்ளது.சரி இந்த மூவர் ஏன் ஆதித்ய கரிகாலனை கொலை செய்ய வேண்டும்,அவர்களுக்குள்ளே இருக்கும் பகை தான் என்ன?தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட வீர பாண்டியன் யார்?அவருக்கும் ஆதித்ய காலனுக்குமான உறவு என்ன என்பதை இங்கே பார்க்க இருக்கிறோம்.

ஆதித்ய கரிகாலன் தந்தை சுந்தர சோழன் ஆட்சி செய்த போது,பாண்டிய மன்னன் வீர பாண்டியன் இலங்கை வேந்தனுடன் இணைந்து சோழ பகுதிகளை தாக்குவதும் திடீரென மறைவதுமாக இருந்தனர்.இந்த தாக்குதல்கள் சோழ பேரரசிற்கு பெரும் தலைவலியாக அமைந்தது.இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஆதித்ய கரிகாலன் படை பாண்டியர்கள் மீது போர் தொடுத்து வீழ்த்தியது.அதோடு நில்லாமல் பாண்டிய மன்னன் வீரபாண்டியனை விரட்டி சென்று நிராயுதபாணியான வீரபாண்டியன் தலையை கொய்தான்.இது பாண்டியர்களின் கோபத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அந்த காலத்தில் பார்ப்பனர்களுக்கு இலவசமாக நிலங்களை வழங்கும் வழக்கம் இருந்தது.இதற்கு பிரம்மதேயம் என்று பெயர். கஜமல்ல பல்லவராயன் என்ற நபருக்கு இடையேயான சொத்து ஆவணமாகும், அவர் கிராமத்தின் அறங்காவலர்களிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கினார்.

இப்போது நீங்கள் கேட்கலாம் – ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டதற்கும் சொத்து ஆவணத்திற்கும் என்ன சம்பந்தம்? சரியான கேள்வி. படிக்கவும்.

ஒரு சொத்தின் முந்தைய உரிமையாளர்களின் பெயர்களை சொத்து ஆவணத்தில் சேர்ப்பது ஒரு நிலையான நடைமுறை. இந்த ஆவணத்தில் (கல்வெட்டு) சோமன், ரவிதாசன், பரமேஸ்வரன் ஆகிய மூன்று சகோதரர்களின் பெயர்கள் இப்படித்தான் இருந்தன. கல்வெட்டு வெறும் பெயர்களைக் குறிப்பிடுவதுடன் நிற்கவில்லை.மேலும் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் இவர்கள்தான் என்று குறிப்பிடுகிறது!

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கல்வெட்டு இந்த மூன்று பேரின் பட்டங்களை குறிப்பிடுகிறது. இந்தப் பட்டங்களின் மூலம் அவர்களில் இருவர் பாண்டிய நாட்டில் உயர் பதவிகளையும், ஒருவர் சோழ நாட்டில் உயர் பதவிகளையும் வகித்ததை அறிய முடிகிறது. ஆதித்த கரிகாலனின் கொலைத் திட்டம் பாண்டிய நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்த மூன்று சகோதரர்களால் செயல்படுத்தப்பட்டது என்றும் பாண்டிய மன்னன் வீரபாண்டியனைக் கொன்றதற்குப் பழிவாங்க தான் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக கருதப்படுகிறது.

இதற்கான வீடியோ கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button