தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு என்ற பெயர் பாக்களின் தொகுப்பு…!!
தமிழ் என்பதும் தமிழர்களின் நிலப்பரப்பைக் குறிக்கும்...
தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே சங்ககால தமிழ்இலக்கியத்தில் இடம்பெற்ற தமிழ்நாடு என்ற பெயர் பாக்களின் தொகுப்பு!
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்”
-சிலப்பதிகாரம்
“தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர்
செருவேட்டுப் புகன்று எழுந்து
மின்தவழும் இமய நெற்றியில்
விளங்கு விற்புலிகயல் பொறித்த நாள்”
–சிலப்பதிகாரம்
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
-பரிபாடல்
“தண்டமிழ் வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்த லல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றமுண் டாகு மளவு.”
–பரிபாடல்
“துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை
மறக்கமுற்றா ரதனயலே மறைந்துறை வரவ்வழி நீர் வல்லையேகி
உறக்கமுற்றா ரென்னுற்றர் எனுமுணர்வினொடும் ஒதுங்கி
மணியாலோங்கல் பிறக்கமுற்ற மலைநாடு நாடியகல் தமிழ் நாட்டில் பெயர்திர் மாதோ”
-கம்பராமாயணம்
“தமிழ்நாட்டில் போனார் ஞானத்தலைவனார்”
-திருநாவுக்கரசு நாயனார் புராணம்
“மண்குலவு தமிழ்நாடு
காண்பதற்கு மனங்கொண்டார்”
-திருநாவுக்கரசு நாயனார் புராணம்
“பூமியர் தமிழ்நாட் டுள்ள பொருவில்”
-சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராணம்
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேயத்த
-அகநானூறு
“கங்கைத் துறைவன் பொறையன் தமிழ்நாடன் சோணாட்டு இறைவன் திருப்பவனி என்றாள்”
-ஒட்டக்கூத்தர் இராசராச சோழனுலா
” செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே”
-மகாகவி பாரதியார்
“தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே! ”
-மகாகவி பாரதியார்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து
-தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்
“நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல்“
-தொல்காப்பிய இளம்பூரணர் உரை
“செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம்குறிப் பினவே திசைச்சொல் கிளவி “
-தொல்காப்பியம்
- தமிழ்நாடு என்ற சொல் மட்டுமல்லாமல் தமிழகம் என்பதும், தமிழ் என்பதும், தமிழ்நிலம் என்பதும், நாடு என்ற சொல்லும் தமிழர்களின் நிலப்பரப்பைக் குறிக்கும் சொற்களேயாகும்…!!