Site icon ழகரம்

தமிழ்க் காவலர் “ஆறுமுக நாவலர்‌” தமிழ் மொழியியல் தொண்டு. | Arumuga Navalar.

தமிழ்க் காவலர் "ஆறுமுக நாவலர்‌'' தமிழ் மொழியியல் தொண்டு. | Arumuga Navalar.

தமிழ்க் காவலர் “ஆறுமுக நாவலர்‌”

தமிழ் மொழியியல் தொண்டு. | Arumuga Navalar.

என்னை, எழுத்துஞ்‌ சொல்லும்‌ யாப்‌பும்‌ ஆராய்வது பொருளதிகாரத்தின்‌ பொருட்டன்றே பொருளதிகாரம்‌ பெறேமேயெனின்‌, இவை பெற்றும்‌ பெற்றிலேம்‌.

“சத்தமுஞ்‌ சோதிடமும்‌ என்றுங்‌ 

கவைபிதற்றும்‌ பித்தரிற்‌ பேதையார்‌ இல்‌’’ 

“மரபுநிலை திரிதல்‌ செய்யுட்‌ கில்லை 

மரபுவழிப்‌ பட்ட சொல்லி னான

மரபுநிலை திரியிற்‌ பிறிதுபிறி தாகும்‌

வழக்கெனப்‌ படுவ துயர்ந்தோர்‌ மேற்றே 

நிகழ்ச்சி யவர்கட்‌ டாக லான 

மரபுநிலை திரியா மாட்சிய வாகி 

யுரைப்டு நூரு மிருவகை யியல 

முதலும்‌ வழியுமென நுதலிய நெறியின” 

இயற்சொற்‌ றிரிசொற்‌ றிசைச்சொல்‌ வடசொல்லென்‌

றனைத்தே செய்யு வீட்டச்‌ சொல்லே 

இயற்சொல்லானுஞ்‌ செய்யுட்‌ சொல்லாதிய திரிசொல்லானுமேயன்றித்‌ இசைச்‌ சொல்லும்‌ வடசொல்லும்‌ இடைவிராய்ச்‌ சான்றோர்‌ செய்யுள்‌ செய்யுமாறு கண்டு ஏனைப்‌ பாடைச்‌ சொல்லுஞ்‌ செய்யுட்குரியன பிற பாடைச்சொல்‌ உரிய வல்லவென்று வரையறுத்தவாறு’’

ஒருவரைக்கூறும்‌ பன்மைக்‌ கிளவியு

மொன்றினைக்‌ கூறும்‌ பன்மைக்‌ கிளவியும்‌

வழக்கி னாகிய வுயர்சொற்‌ கிளவி

இலக்கண மருங்கிற்‌ சொல்லா றல்ல.

என்னுஞ்‌ சூத்திரம்‌ அதற்குச்‌ சான்று பகருகின்றது. இன்னும்‌ நேமிநாத ஆசிரியர்‌.

புல்லா எழுத்தின்‌ கிளவிப்பொருள்‌ படினும்‌

இல்லா விலக்கணத்‌ தென்றொழிக… 

“வழுவில்‌ வழக்கமென்பார்‌ உளராயின்‌ இக்காலத்துள்ளும்‌ ஒரு சாரார்க்கல்லது அவர்‌ சான்றோ ரெனப்படாரென்பதூஉம்‌, இங்கனம்‌ கட்டளை செய்யவே காலந்தோறும்‌ வேறுபட வந்த அழிவழக்கும்‌, இழிசனர்‌ வழக்கும்‌ முதலாயினவற்றுக்‌கெல்லாம்‌ நூல்‌ செய்யின்‌ இலக்கண மெல்லாம்‌ எல்லைப்படாது இறந்தோடு மென்பதூஉம்‌, இறந்த காலத்து நாலெல்லாம்‌ பிறந்த பிறந்த வழக்குப்‌ பற்றிக்‌ குன்றக்கூறல்‌ என்னுங்‌ குற்றந்‌ தங்குமென்பதூஉம்‌…

User Rating: Be the first one !
Exit mobile version