தமிழ்க் காவலர் “ஆறுமுக நாவலர்” தமிழ் மொழியியல் தொண்டு. | Arumuga Navalar.
தமிழ்க் காவலர் “ஆறுமுக நாவலர்”
தமிழ் மொழியியல் தொண்டு. | Arumuga Navalar.
- ஆறுமுக நாவலர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளில் இலக்கணப் பணியும் ஒன்றாகும். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை எழுதியதுடன் நன்னூற் காண்டிகையுரையைப் புதுக்கியும் திருத்தியும் அவர் அமைத்துள்ளார். இவ்விரு நூல்களுள் இலக்கணச் சுருக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு நாவலரை நவீன மொழியியலாளர் எவ்வாறு மதிப்பிடுவர் என்பதைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
- நவீன மொழியியற் கருத்துக்கள் நாவலருடைய காலத்திலே இங்கு நன்கு பரவியிருந்தனவென்றே, அக்கருத்துக்களை அவர் . அறிந்திருந்தாரென்றோ கூறுதற்தில்லை. ஆனால், அக்கருத்துக்களின். பின்னணியிலே அவருடைய இலக்கணக் கருத்துக்களை விமரிசனம் செய்வது பயனுடைத்தாகும் என்பதிலே ஐயமில்லை.
- இலக்கணமென்பது மொழியின் விவரணமேயொழிய, மொழி இவ்வாறு பேசப்பட வேண்டும், இவ்வாறு எழுதப்பட வேண்டும் என விதிமுறை செய்வதல்ல என்பது நவீன மொழியியலின் முக்கிய கோட்பாடாகும். இந்த வகையில் மேலைத் தேயத்திலும் இங்கும் பல மொழிகளுக்கு எழுதப்பட்ட மரபுவழி இலக்கண தூல்கள் விதிமுறை இலக்கணங்களாகவே பெரும்பாலும் அமைந்து வந்துள்ளன. அது மாத்திரமன்றி, இம் மரபுவழி இலக்கண நூல்கள் இலக்கியம், தத்துவம் ஆகியன பற்றி அறிவதற்கான கருவி நூல்களே என்னுங் கருத்தும் நிலவி வந்துள்ளது. இவ்விடத்திலே, ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம் என்ற நூலின் முதல் இரு வாக்கியங்களை நோக்குவோம்: –
- இலக்கண நாலாவது உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
- அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும். இவ்விரு அதிகாரங்களையும் துணைகொண்டு நாவலர் நவீன மொழியியற் கோட்பாடுகளுக் குடன்பட்டவரல்லரென் றுங் கூறலாம்.
- முதலிலே, நாவலர் எவ்வாறு நவீன மொழியியற் கோட்பாட்டுக்கு உட்படுகின்றவர் என்பதை ஆராயலாம். இலக்கணம் என்பது மொழியின் இலட்சணங்களைக் கூறுவதேயன்றி இலக்கியத்தைக் கற்பதற்குரிய கருவிநூல் அல்ல என்பது நவீன மொழியியற் கோட்பாடாகும். ஆனால், தமிழ்நாட்டிலே “இலக்கணம்” என்னுஞ்சொல் தனியே மொழிபற்றிய விவரணத்துக்காகக் கையாளப்படவில்லை, மொழியாலான இலக்கியம், அவ்விலக்யத்துக்குப் பொருளாகும் முதல், கரு, மக்கள் வாழ்வு ஆகியனவற்றின் நெறிகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கண நூலைச் சுட்டுதற்கு புலம், பனுவல் என்ற சொற்களையே அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கையாண்டுள்ளார். புலம், பனுவல் என்னும் இரு சொற்களுமே சாஸ்திரங்களை அல்லது மெய்ஞ்ஞானத்தினைக் குறிப்பனவாயுள்ளன. இந்நிலை, மொழியாய்வு பற்றி எம் பண்டையோர் கொண்டிருந்த கருத்தினை ஓரளவு புலப்படுத்துகின்றது எனக் கொள்ள இடமுண்டு; முன்னர் மொழிபற்றிய ‘ஆய்வெல்லாம் இலக்கியத்தைப் படிப்பதற்கும், சாஸ்திர நூல்களின் பொருளைத் தெளிவுற அறிந்து கொள்ளுதற்காகவுமே நடைபெற்றது. இறையனார் அகப்பொருள் உரைகாரர்,
என்னை, எழுத்துஞ் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்.
- என்று கூறியுள்ளதை இங்கு நினைவு கொள்ளலாம். இதே நிலை மேலைத்தேய இலக்கண வரலாற்றிலுங் காணப்படுகின்றது.
- எழுத்தையும் (அல்லது ஒலியையும்) சொல்லையும் அடிப்படையாகக் கொண்ட மொழி. மேலைத்தேயத்திற் பண்டைக்காலத்திலே தத்துவ விசாரத்துக்கும், பண்டைய இலக்கயங்களின் பொருளைத் தெளிந்து கொள்வதற்கும் கருவியாகவே அமைந்தது. தமிழ் இலக்கண மரபிலும் இக்கருத்து நன்கு வேரூன்றியிருந்ததென்பதற்கு சபாபதி.நாவலருடைய பின்வருங் கூற்றினை எடுத்துக்காட்டலாம்.
- இவ்வதிகாரத்து எழுத்துச் சொற் கருவியாக உணரப்படும். பொருளிலக்கணம் உணர்த்தப்படும் எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தார் அவ்வுணர்ச்சி கருவியாகக் கொண்டு பொருளிலக்கணம் ஒருதலையான் ஆராய்ந்தும் உறுதி தலைக்கூடக் கட வார் ஆவரென்க,
- எழுத்தையுஞ் சொல்லையும் அடிப்படையாகக் கொண்ட மொழியாய்வினைத் தனியாக மேற்கொள்ளாது, அவற்றைக் கருவியெனக் கொண்டு, ஏனைய பொருள் விடயங்களையுஞ் சேர்த்து ஆராய்வதே இலக்கணம் என்று கருதிய தமிழ்ப் பேசும் அறிஞர் குழாமொன்று தமிழ் நாட்டிலே இருந்துவந்துள்ளது. ஆனால், அதே வேளையில் எழுத்துஞ் சொல்லும் ஆராய்வதே “இலக்கணம்” என்னுங் கருத்தினைக் கொண்ட இன்னோர் அறிஞர் குழாமும் தமிழ்நாட்டிலே இருந்தது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கதாரணமாக நேமிநாதம் என்னும் நூலினை எழுதிய நேமிநாதர் எழுத்தையுஞ் சொல்லையும் ஆராய்வதே “இலக்கணம்” என்னுங்கருத்தினை உடையவராவர். எழுத்துஞ் சொல்லும் என்னும் மொழியாய்வினைத் தனியாக மேற்கொண்ட குழாத்தினர் மற்றைய குழாத்தினரின் கண்டனத்துக்கு முட்பட்டனர். அவ்வாறெழுந்த கண்டன மரபினைச் சபாபதிநாவலர் பின்வருமாறு தொகுத்துக் கூறுகின்றார்.
- முகத்துக் கண்ணுடையராயினார் அது கருவியாக உருவப்பொருள் நாடிக் காண்டலைப் பயனாகக் கொள் ஞூதல் போல, எண்ணும் எழுத்தும் என்னும் அறிவுக் கண்ணுடையராயினர் அவ்வுணர்ச்சி கருவியாகப் பொருளிலக்கணம் ஆராய்ந்து கண்டு உறுதி தலைக்கூடுதலைப் பயனாகக் கொள்ளவேண்டும் என்பதாயிற்று. இனி அவ்வாறு முயலாது அக்கருவி நூல் உணர்ச்சி மாத்திரையே அமையுமென்றிருப்பரேல் அக்கல்வி அவர்க்கு வீண் உழப்பாவதல்லது பயப்பாடு உடைத்தாமாறு இன் றென்பர்,
“சத்தமுஞ் சோதிடமும் என்றுங்
கவைபிதற்றும் பித்தரிற் பேதையார் இல்’’
- என்றார் நீதிநூலோர் என்க. இனி எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்து வல்லராக முயல்வார் இக்காலத்துப் பலருளர். அவ்வாராய்ச்சி கருவியாகப் பொருளாராய்ந்து உறுதி தலைக்கூட முயல்வார் அரியர்.
- மேற்காட்டிய கூற்றுக்கள் மொழி வினைத் தனியாக ஆய்வு செய்யும் ஒரு குழாத்தினர் தமிழ்நாட்டிலே இருந்து வந்துள்ளனர் என எமக்கு உணர்த்துகின்றன. அக்குழாத்தினரின் கருத்தினை உள்வாங்கியவராகவே ஆறுமுகநாவலருந் திகழ்ந்தார். அவருடைய இலக்கணச் சுருக்க வாக்கியங்களில் வரும்.
- இலக்கண நூலாவது எழுதிததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என மூன்றதிகாரங்களாக வகுக்கப்படும்.” என்னும் பகுதி இதனை நன்கு தெளிவுறுத்துகின்றது. மொழியினைத் தனியாக ஆராயும் இக்கால மொழியியல் துறையின் போக்கிற்கேற்ப அவருடைய கூற்றும் அமைந்துள்ளதெனலாம்.
- இனி, நாவலர் எவ்வாறு நவீன மொழியியற் கோட்பாடுகளுக்கு முரணாகின்றார் என்பதை நோக்குவோம். இலக்கண் நூலாவது, உயர்ந்தோர். வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம் என்னும் அவருடைய கூற்று நவீன மொழியியற் கோட்பாடுகளுக்கு முரணாயமைகின்றது.
- முதலில், இலக்கண மென்பது மொழியின் விவரணமேயொழிய விதிமுறையல்ல வென்னும் இக்கால மொழியியற் கோட்பாட்டினை எடுத்து நோக்குவோம். தமிழ் இலக்கணகாரர் விதிமுறை இலக்கணத்தினையே வலியுறுத்தி வந்துள்ளனர், இலக்கியங் கண்டதற் கிலக்கணங் கூறும் மரபும், அம்மரபின் விளைவாகப் பண்டைய இலக்கிய மொழி தூய்மையானது; அது பேணப் படவேண்டியது என்னும் நோக்கமுமே தமிழில் விதிமுறை இலக்கண மரபுக்கு வித்திட்டன. தொல்காப்பியரின் பொருளதிகாரத்து மரபியலிலே,
“மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி னான
மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்
வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான
மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைப்டு நூரு மிருவகை யியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின”
- என்று கூறியுள்ள சில சூத்திரங்கள் தமிழிலே விதிமுறை. இலக்கண டீரபுக்கு வழிகோலின. எனக். கூறலாம், தொல் காப்பிய உரைகாரர் விதிமுறை இலக்கணத்துக்கு மேலும் வழிகோலினர்.
இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென்
றனைத்தே செய்யு வீட்டச் சொல்லே
- என்று தொல்காப்பியர் கூறுவது, அவர் காலத்துச் செய்யுட்களிலே இடம் பெற்ற சொற்கள் பற்றிய விவரணமாக அமையலாம் ஆனால் அச்சூத்திரத்துக்கு உரை எழுதிய கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேனாவரையர்.
இயற்சொல்லானுஞ் செய்யுட் சொல்லாதிய திரிசொல்லானுமேயன்றித் இசைச் சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான்றோர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப் பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரியன பிற பாடைச்சொல் உரிய வல்லவென்று வரையறுத்தவாறு’’
- என்று கூறுவது விதிமுறை வாய்பாடாக அமைகின்றது. இத்தகைய மரபின் வளர்ச்சி நிலையினையே நாம் ஆறுமுக ‘நாவலரிலே தரிசிக்கின்றோம். விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும் இலக்கணம் கருவியாக அமைகின்றது என அவர் நேரடியாகவே விதிமுறை இலக்கணம் வகுக்கின்றார்.
- “விதிப்படி’’ என நாவலர் கூறியவுடனே அதற்குரிய உரைகல் யாது என்னும் வினா தவிர்க்கமுடியாதபடி மனத்திலே எழக்கூடியதொன்றாகும் அதற்குரிய உரை கற்களாக உயர்ந்தோர் வழக்கேயும் செய்யுள் வழக்கையும் நாவலர் குறிப்பிட்டுள்ளார்; இவ்விரு வழக்கனையும் அடிப்படையாகக் கொண்டே இலக்கணம் அமையவேண்டுமென்பது இவருடைய கருத்தாகும், இக்கருத்து இக்கால மொழியியலின் இன்னொரு கோட்பாட்டுடன் முரண்படுகின்றது. கருத்துத் தொடர்புக்கேற்ற சாதனமாக மொழி அமைவதற்கு அதன் பேச்சு வடிவமும் எழுத்து வடிவமும் இரு மூலங்களாக அமைகின்றன. இவ்விரு மூலங்களுட் பேச்சு வடிவுக்கே இக்கால மொழியியலாளர் முக்கியத்துவம் கொடுக்கின்றனர் ஆனால், நாவலர் உட்பட எமது தமிழ் இலக்கணகாரர் பலரும் எழுத்து வடிவுக்கே முக்கியத்துவங் கொடுத்துள்ளனர். இலக்கியங் கண்டதற் இலக்கணம் இயம்பும் மரபின் விளைவே எழுத்து வடிவுக்கு முக்கியத்துவங் கொடுப்பதற்குக்காரணமாயிற்று.
- மேலைத்தேயத்திலும் பழைய செய்யுள் வழக்கைப் பேணும் முயற்சியினாலே எழுத்து வழக்கு முதன்மை பெற்றதை அறிகிறோம், பேச்சு மொழியே முக்கியத்துவம் வாய்த்ததென நவீன மொழியியலார் கூறியபோதும், எழுத்து மொழிக்கும் சில நற்பண்புகள் உண்டென் பதை அவர் மறுத்திலர்.
- மொழியறிவினை “எழுத்து எனவும், இலக்கண நூல்களை எழுத்து நூல்” எனவும் குறிப்பிடும் வழக்கம் தமிழிலேயுண்டு. இலக்கணம் என்னுஞ் சொல் எழுதப்பட்ட இலக்கிய மொழியின் திறனை அறிவதைக் குறிப்பதன்றி, பேச்சு வழக்கிலுள்ளவற்றை அறியும் திறனுக்குரியதல்ல என்பதனைத் தொல்காப்பியரே ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியு
மொன்றினைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.
என்னுஞ் சூத்திரம் அதற்குச் சான்று பகருகின்றது. இன்னும் நேமிநாத ஆசிரியர்.
புல்லா எழுத்தின் கிளவிப்பொருள் படினும்
இல்லா விலக்கணத் தென்றொழிக…
- என்று கூறியிருப்பதும் மேற்போந்த கருத்துக்கு மேலுமொரு சான்றாகின்றது. இவ்வாறு எழுத்துமொழி ஆய்வே இலக்கணம் என மரபு தமிழ் இலக்கணக்காரருடைய கோட்பாடாக அமைந்த காரணத்தினாலே, பேச்சு மொழியின் இலக்கணத்தை எவரும் எழுத முற்பட்டாரில்லை அத்துடன் சாதாரண மக்களுடைய பேச்சுமொழி இழித்துரைக்கவும் பட்டது உதாரணமாக, “வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே” என்னுஞ் சூத்திரத்தை மனத்திலே கொண்டு பேராசிரியர்,
“வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத்துள்ளும் ஒரு சாரார்க்கல்லது அவர் சான்றோ ரெனப்படாரென்பதூஉம், இங்கனம் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபட வந்த அழிவழக்கும், இழிசனர் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கண மெல்லாம் எல்லைப்படாது இறந்தோடு மென்பதூஉம், இறந்த காலத்து நாலெல்லாம் பிறந்த பிறந்த வழக்குப் பற்றிக் குன்றக்கூறல் என்னுங் குற்றந் தங்குமென்பதூஉம்…
- என்று கூறுமிடத்து உயர்ந்தோர் வழக்கன்றி, ஏனையோர் வழக்கு அழிவழக்கு என்றும் இழிசனர் வழக்கு என்றுங்குற் றிப்பிட்டுள்ளமையை இங்கு சுட்டிக்காட்டலாம். பேச்சுமொழியினைப் பேராசிரியர் இவ்வாறு இழிவுபடுத்திக் கூறுதற்குரிய காரணம், எழுத்து வழக்குக்கும் உயர்ந்தோருடைய (யார் இவ்வுயர்ந்தோர் என்பதும் எங்கும் தெளிவுபடுத்தப்படவில்லை) பேச்சுவழக்குக்கும் முதன்மை கொடுக்கப்பட்டதேயாகும்.
- எமது இலக்கணகாரர் பேச்சுமொழிக்கு இலக்கண நூல் எழுதவில்லையென்று இங்கு குறை கூறவில்லை அதனை எழுதப்புகன் வருமிடர்கள் பற்றிப் பேராசிரியர் மேலே பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார் ஆனால், பிறந்து மொழி பயின்று எழுதப் பழகுதற்கு முன்னரே நாம் பேசப் பழகி விடுகிறோம் என்பதையும் பேச்சுமொழி இழிசனர் வழக்கு ஆகாதென்பதையும் பேராசிரியர் உணராதுபோனதற்கு தமிழிலே வேரூன்றிவிட்ட எழுத்து வழக்கிலக்கண மரபே காரணமாகும். குழந்தை என்றால் “உயர் குழந்தை” என்றோ **இழிசனர் குழந்தை** என்றோ கருதாது, *குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொற் கேளாதவர்” என்று வள்ளுவர் கூறியுள்ளார். குழந்தையின் பேச்சும் **இழிசனர் வழக்கு ** ஆகுமோ தெரியவில்லை. இத்தகைய ஒரு மரபினை மீற முடியாதநிலை நாவலருக்குமிருந்த காரணத்தினாலே தான் இலக்கணமென்பது செய்யுள் வழக்கையும் உயர்ந்தோர் வழக்கையும் கொண்டமைவதாகக் கூறினார். இவ்வாறு பல இடங்களிலே மரபு வழிப்பட்ட இலக்கணச் சிந்தனைகளைக் கொண்டுள்ள நாவலரின் இலக்கணச் சுருக்கத்தினை ஊன்றிப் படிக்கும் மொழியியலாளர் எவருமே சிற்சில இடங்களிலே அவருடைய நுண்ணாய்வுப் போக்கனைத் தரிசக்கத் தவறமாட்டார் என நம்பலாம்.
- ஓரளவு தொல்காப்பியர், நன்னூலார் கூறிய இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைச் சுருங்கிய முறையிலே கூற முயன்றுள்ளார் நாவலர் அவ்வாறு கூற முற்படுமிடத்துக் காலத்துக்கு ஒவ்வாத சில பழைய இலக்கண விபங்களை அவர் நீக்கிவிடுதலை நாம் அவதானிக்க முடிகின்றது. தொல்காப்பியர் ஏழுத்ததிகாரத்திலே அமைத்த பிறப்பியல் என்னும் பகுதியினை நன்னூலார் தன்னுடைய இலக்கண நூலிலே அப்படியே திரும்பக் கூறியுள்ளார். நாவலருடைய இலக்கணச் சுருக்கத்திலே பிறப்பியல் என்னும் பகுதி அமைக்கப்படவில்லை. அவா் அவ்வாறு அப்பகுதியினை நீக்கியதற்கு மொழியியல் அடிப்படையிலே காரணம் கூறலாம் போறல் தோன்றுகின்றது. எழுத்ததகாரம் என்னும் பகுதியிலே ஒலியதிகாரத்துக்குரிய பிறப்பியற் சூத்திரங்களைக் குறிப்பிடுதல் பொருத்தமோவென நாவலர் எண்ணியிருக்கலாம். மேலும், நாவலர் ஆங்கில மொழியினைத் துறைபோகக்கற்றவர். அதனால், ஆங்க மொழியிலே ஒலியியல் பற்றிய ஆய்வுகளைப்பற்றி அவர் அறிந்திருக்கக் கூடும். ஆங்கில மொழியிலே a என்னும் ஒலி cut என்னுஞ் சொல்லிலே [A] என்ற ஓலியாகவும் cat என்னுஞ் சொல்லிலே [a] என்னும் ஒலியாகவும் car என்னுஞ் சொல்லிலே [a] என்னும் ஒலியாகவும் ஒலி வேறுபாடு கொள்ளுதலை அவர் நன்கறித்திருப்பர். அதேபோன்று தமிழிலே /௧/ என்னும் எழுத்து கண் என்னுஞ் சொல்லிலே [K] ஒலியாகவும் மகன் என்னுஞ் சொல்லிலே [h] ஒலியாகவும் தங்கம் என்னுஞ் சொல்லிலே [g] ஒலியாகவும் ஒலிப்பதை நோக்குமிடத்து தொல்காப்பியரோ நன்னூலாரோ கூறிய பிறப்பியற் சூத்திரங்கள் அத்தகைய ஒலி துட்பங்களை நுணுக்கமாக எடுத்துக் கூறுவனவல்ல என உணர்ந்து அவற்றைக் குறியாது அவர் நீக்கியிருக்க வேண்டுமெனக் காரணங் கூறலாம்.
- தொல்காப்பியர் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பாகுபாடு செய்ததோடு, இயற்சொற்றிரி சொற்றிசைச்சொல் வட சொல்லென்றனைத்தே செய்யு ளீட்டச் சொல்லே,'” என்று வேறொரு வகையான பாகுபாட்டினையுஞ் செய்துள்ளார். தொல்காப்பியருக்குப் பின்வந்த நேமிநாதர், நன்னூலார் ஆகியோர் தொல்காப்பியர் மேற்கொண்ட அவ்விரு சொற் பாகுபாட்டினையும் உறழக்கூறியுள்ளனர் ஆனால், நாவலரோ தொல்காப்பியர் பெயர், வினை, இடை, உரி என்ற பாகுபாட்டினை மத்திரங் கூறி விட்டு, இரண்டாவது வகையான பாகுபாட்டினை அறவே நீக்கியுள்ளார்.
- நாவலர் அவ்வாறு அப் பாகுபாட்டினை நீக்கியமையை நவீன மொழியியற் போக்கினிடிப்படையிலே நியாயப்படுத்தலாம். பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு இலக்கண அடிப்படையிலான பாகுபாடாகும். உலகிலுள்ள மொழிகள் பலவற்றிலும் இத்தகைய பாகுபாடு மேற்கொள்ளப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம் ஆனால், இயற்சொல், திரிசொல், தசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடு சொற்பத அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்ட தொன்றாகும். எழுத்துக்கள் (அல்லது ஒலிகள்) சேர்ந்து சொற்களாவதும் அச்சொற்கள் தொடர்ந்து சொற்றொடராவதும் ஆகிய இலக்கணப் போக்குக்கு சொற்பத அடிப்படையிலான பாகுபாட்டினாலே எவ்வித பயனுமில்லை என்பதை நாவலர் உணர்ந்திருக்கவேண்டும். அத்துடன் அத்தகைய பாகுபாடு இக்காலத்துத் தமிழ்மொழி இயல்புக்குப் பொருத்தமற்ற தொன்றெனவும் அவர் எண்ணியிருக்கலாம்.
- தமிழ்ச்சொற்கோவையிலே தமிழ்மொழிக்கேயுரிய சொற்களை இயற்சொல் இரிசொல் என்று பாகுபடுத்திய தொல்காப்பியர், தமிழ்மொழியல்லாத சொற்களை “இசைச்சொல்” என்றும் “வடசொல்” என்றும் இனங்கண்டுள்ளார். தமது பிரதேசத்தின் எல்லைகளிலே சில மொழிகள் பேசப்படுவதையும், அவை ஒரளவு தமிழ்ச்சாயல் கொண்டிருப்பதையும் தொல்காப்பியர் உணர்ந்திருக்கவேண்டும். இவை தமிழோடு நெருங்கிய தொடர்புடைய கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளாயிருந்திருக்கலாம். தமிழின் சகோதர மொழிச்சொற்கள் வழக்கிலுஞ் செய்யுளிலும் கையாளப்படுவதைக் கண்ணுற்ற தொல்காப்பியர் அவற்றை முற்றாகப் புறப் புறக் தன்மையுடைய வேற்றுமொழிச் சொற்களாக எண்ணாது, திசைச்சொல் என்னும் தனியொரு பாகுபாட்டுக்குள் அடக்கினார்.
- தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் தோன்றுங் காலத்திலே கன்னடம் தமிழ்மொழி நிலத்துப் பேச்சுமொழியாக இருந்தது” என்று கமில்ஸ் வெலபில் கூறுவதும் 50 இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும். இவ்வாறு தமிழ்ழொழி நிலத்திலிருந்து வந்த மொழிச் சொற்களை திசைச்சொல்லென்றும் பிறமொழியாகிய ஆரியமொழியிலிருந்து வந்த சொற்களை வடசொல்” என்றும் தொல்காப்பியர் பாகுபாடு செய்துள்ளார். ஆனால் நாவலருடைய காலத்திலே கன்னடம் தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் எல்லாமே பிறமொழிகள் எனக் கொள்ளப்பட்டன. இவற்றைவிடப் போத்துக்கேய், டச்சு, ஆங்கில மொழிச் சொற்களும் பிற மொழிச் சொற்களாகத் தமிழிலே கலந்தன. ஆகவே திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடு இக்காலகட்டத்திலே பொருத்தமற்றதென தாவலர் உணர்ந்த இருக்க வேண்டும்.” அதனால் தன்னுடைய இலக்கண் நூலிலும் இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாட்டினை முற்றாக நீக்கிவிட்டார்;
- தொகுத்து நோக்குமிடத்து, இலக்கணச் ௬ருக்கம் என்னும் நூலினை நாவலர் எழுதியபோது தனக்கு முன்னெழுந்த தமிழ் இலக்கணங்களை அப்படியே சுருக்கமாகக் கூறும் நோக்குடையவராக இருக்கவில்லை என்பது உண்மை அவ்விலக்கணங்களை நுண்ணாய்வு அடிப்படையிலே நோக்கயே தன் பணியில் ஈடுபட்டார். அதனால் அவருடைய இலக்கண அமைப்பிற் பண்புகளை இக்கால மொழியியற் கோட்பாடுகள் சிலவற்றின் மூலம் நியாயப்படுத்தக் கூடியதாயமைந்தன ஆனால், பெருமளவிலே அவர் மரபுவழி இலக்கணக்கோட்பாடுகளைப் பொன் ஏர்ப்போல் போற்றியுமுள்ளார்.