கட்டுரைகள்செய்திகள்

இன்று இராஜராஜ சோழனின் 1037 வது பிறந்தநாள் இல்லை ஆனால், பிறந்தநாள் இன்று தான்…!!

பிறந்த நாளும், ஆட்சிக்கு வந்த நாளும்...

இன்று இராஜராஜ சோழனின் 1037 வது பிறந்தநாள் இல்லை ஆனால், பிறந்தநாள் இன்று தான்!!

தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தப்படும்

திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக்

காந்தளூர்ச் சாலைக் கலமறுத் தருளி

வேங்கை நாடுங் கங்க பாடியும்

தடிகை பாடியும் நுளம்ப பாடியும்

குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்கமும்

முரட்டெழிற் சிங்களர் ஈழமண்டலமும்

இரட்ட பாடி யேழரை யிலக்கமும்

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமுந்

தெண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதன்

னெழில்வள ரூழியு ளெலலா யாண்டுந்

தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத்

தேசுகொள் கோராசகேசரி வர்மரான

உடையார் ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு. 

  • கி.பி.985 அவர் ஆட்சிக்கு வந்த ஆண்டு ஐப்பசி சதயம், மாமன்னர் இராஜராஜ சோழன் சதய  விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பர். அத்துடன் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதனால் தஞ்சை மாவட்டமே விழா கோலம் பூண்டிருக்கும்.
  • இராஜராஜ சோழன் எந்த ஆண்டு பிறந்தார் என்ற தகவல் இல்லை, ஆனால் ஐப்பசி மாதத்தின் சதய நாளில் பிறந்தார் என்ற தகவல் மட்டும் கிடைத்துள்ளது. அதன் காரணமாகத்தான் அவரது காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் சதய தினத்தன்று கோவில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றது.

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா

 

  • சதய விழாவாக இரண்டு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் நாள், மாமன்னர் இராஜராஜ சோழன் அரியணை ஏறிய நாளேயாகும்.
  • கி.பி 985ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் இராஜராஜ சோழனுக்கு முடி சூட்டப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
  • உலக வரலாற்றிலேயே மாபெரும் யானைப்படை, கப்பல் படையைக் கொண்டு திக்கெட்டும் வெற்றியைக் குவித்த மாமன்னன் ராஜராஜன் என்று வரலாறு போற்றுகிறது.

இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா

  • அருண்மொழிவர்மன் என்ற இயற்பெயரைக் கொண்ட இராஜராஜன்! சுந்தர சோழன் எனும் இரண்டாம் பரகேசரிக்கும், வானவன் மாதேவிக்கும் ஐப்பசி சதய நாளில் 3 ஆவது மகனாகப் பிறந்தார் என்று வரலாறு கூறுகின்றது.
  • அதே சதய நாளில் 985-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று 1014-ம் ஆண்டு வரை ஆட்சி செய்தார். 40க்கும் அதிகமான சிறப்புப் பெயர்களால் போற்றப்படுபவர். இராஜராஜ சோழனுக்கு குந்தவை, மாதேவடிகள் உள்ளிட்ட மூன்று மகள்களும் இராஜேந்திர சோழன் என்ற மகனும் இருந்தனர்.
  • மற்ற தேசங்கள் எல்லாம் கண்டறியப்படாத அல்லது வளர்ச்சியுறாத காலத்தில் நிர்வாகம், ஜனநாயகம், மராமத்துப் பணிகள், கட்டடக்கலை, இலக்கியம், சமய நல்லிணக்கம் என அனைத்துத் துறைகளிலும் முன் மாதிரியாக நின்ற மாமன்னன் இராஜராஜ சோழனாவார்.இராஜராஜ சோழனின் 1037வது சதய விழா
  • தோல்வியே காணாத மன்னன் படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து, தெற்கு ஆசிய நாடுகள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசாட்சி செய்தவன். நமது வீரத்தின் அடையாளமாகக் கொண்டாப்பட வேண்டியவனின் சதய விழா!!
  • இராஜராஜ சோழன் பிறந்த நாளும், ஆட்சிக்கு வந்த நாளும் ஐப்பசி மாதம் ‘ஒரே சதய நாள்தான்’ ஆனால், 1037 வது  சதய விழாவாகக் கொண்டாடப்படும் ‘ஆண்டு’ என்பது இராஜராஜ சோழன் ‘பிறந்த ஆண்டு அல்ல’ என்ற சரியான வரலாற்றை தமிழர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button