Site icon ழகரம்

பல்லவ சாம்ராஜ்யத்தை முடித்த ஆதித்த சோழன்

பிற்கால சோழர்கள் வரலாற்றில் சோழ சாம்ராஜ்யத்தை துளிர்க்க செய்தவர் விஜயாலய சோழன்.இவர் கி.பி.881-ல் இறந்தார்.அதன் பிறகு இவருடைய மகன் ஆதித்த சோழன் அரசராக அமர்ந்தார்.சோழர்கள் பொறுத்தவரை பரகேசரி,ராஜகேசரி என்று இரு புனை பெயர்களை சூட்டி கொள்ளும் வழக்கம் உண்டு.ஆதித்ய சோழனின் தந்தை பரகேசரி என்று பெயர் சூட்டி கொண்டதால்.ஆதித்த சோழன் ராஜகேசரி என்னும் பெயரை சூட்டி கொண்டார்.மேலும் இவருக்கு கோதண்டராமன் என்ற புனை பெயரும் உண்டு.இந்த பெயர் குறித்து கன்னியாகுமரி கல்வெட்டில் பதிவாகி உள்ளது.இந்த பெயர் வந்த வரலாறும் சுவாரஸ்யமான ஒன்று.

வீழ்ந்து இருந்த சோழ பேரரசு விஜயாலய சோழனால் மீண்டும் வீறு கொண்டு எழுந்தது.அந்த சோழ பேரரசை வலுவாக கால் ஊன்ற வைத்தவர் ஆதித்த சோழன்.சோழர்கள் ஆண்ட தஞ்சாவூர் பகுதியை கைப்பற்றுவதற்கு வந்த பாண்டிய மன்னன் வரகுண வர்மனை திருபுறம்பியம் போரில்  வீழ்த்தினார் ஆதித்த சோழன்.இதன் மூலம் சோழ பேரரசை காப்பாற்றியவர் ஆதித்த சோழன். திருபுறம்பியம் போர் சோழ வரலாற்றை மாற்றியமைத்த போர்.இந்த போரில் தான் சோழ பேரரசு தன்னை வலுவாக நிலை நிறுத்தி கொண்டது.

திருப்புறம்பியத்தில் கி பி 879ல நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்ம பல்லவன் படைகள் பெரும் தோல்வியை அடைந்தன. இப்போரில் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி இறந்தார். போரில் கிடைத்த வெற்றியின் பரிசாக பெரும் நிலப்பகுதியை ஆதித்தய சோழனுக்கு அபராஜிதவர்ம பல்லவன் அளித்தார். போரின் முடிவில் ஆதித்தய சோழனின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தது. பாண்டியர்களின் வசம் இருந்த சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. திருப்புறம்பியப் போரில் தோல்வி அடைந்த பாண்டிய மன்னர் வரகுணவர்மன் ராஜ வாழ்கையத் துறந்து துறவறம் மேற்கொண்டார். இந்த திருப்புறம்பியப் போரானது அதைத் தொடர்ந்த 400 ஆண்டுகளுக்கு சோழப் பேரரசு தென்இந்தியாவை ஆள ஒரு ஆரம்பமாக அமைந்தது.

பின்னர் ஏற்பட்ட ஒரு போரில் ஆதித்ய சோழன் பலம் மிக்க பல்லவப் பேரரசன் அபராசிதவர்மனை தோற்கடித்து, அவரது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

கி பி897ல காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப்பேரரசின் கடைசி மன்னனா அபராஜிதவர்ம பல்லவனுக்கும் ஆதித்தய சோழனுக்கு நடந்த ஒரு போரில் அபராஜிதவர்ம பல்லவன் இறந்தார். ஒரு யானையின் மீது அமர்ந்திருந்த பல்லவ மன்னன் மீது பாய்ந்து அவனை ஆதித்ய சோழன் கொன்றான் என்று கன்னியாக்குமரிக் கல்வெட்டுகள் கூறுகிறது. இதன் மூலம் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தொண்டைநாடு பாவிய இராசகேசரிவர்மன் என்ற பட்ட பெயர் ஆதித்ய சோழனுக்குக் கிடைக்குது.இந்த போருக்கு பின்னர் தான் ஆதித்த சோழனுக்கு கோதண்டராமன் என்ற பெயரும் கிடைத்தது.

பல்லவ பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு பல்லவ அரசோடு நெருக்கமாக இருந்த கங்கை மன்னர் ஆதித்த சோழனின் தலைமையை ஏற்று கொண்டார்.இதன் பிறகு கொங்கு மண்டலத்தை நோக்கி பயணித்து அதனை வெற்றிகொண்டார்.ஆதித்த சோழனின் கொங்கு மண்டல படையெடுப்பு குறித்து “கொங்கு தேச ராஜாக்கள்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.ஆதித்ய வர்மன் கொங்கு பகுதியை கைப்பற்றினார் என்று கல்வெட்டுக்கள் இல்லாவிட்டாலும்.அவரது மகன் முதலாம் பராந்தகன் ஆட்சியின் தொடக்கம் குறித்து கொங்கு பகுதியில் உள்ள கல்வெட்டில் உள்ளது.

இந்த காலகட்டத்தில் சேர மன்னனின் ஆட்சிப்பகுதி தவிர தென்இந்தியாவின் மொத்த நிலப்பரப்பும் சோழப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ இருந்தது. ஆதித்தய சோழன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தய சோழன்நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது. இது தவிர ஆதித்தய சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன் சேரமன்னன் தாணுரவியின் மகளை மணந்தார் என்பதும் தெரிகிறது.பாண்டிய,பல்லவ சாம்ராஜ்யங்களை சரித்த ஆதித்த சோழன் சேரர்களோடு நட்பு பாராட்டியது ஆச்சரியமான ஒன்று.அந்த நட்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான வலுவான வரலாற்று காரணங்கள் இல்லை.

இவர் காலத்தில் போரெல்லாம் ஒருவாறாக ஓய்ந்த பின்னர் சமய பணிகளில் தன்னை  ஈடுபடுத்தி கொண்டார். இவர் காலத்தில் அதிகமான கோவில்கள் கட்டப்பட்டன.காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தார் என அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. குறைந்தது 50ல் இருந்து 108 சிவாலயங்கள் வரை கட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.திருபுறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் பயனாக அங்குள்ள பக்தர்களுக்கு கோவிலை கட்டினார் அக்கோவிலுக்கு ஆதிதேசுரம் என்னும் பெயரை வழங்கினார்.

ஆதித்த சோழனுக்கு இரு மனைவிகள் இருந்தனர்.ஒருவர் இளங்கோப்பிச்சி மற்றொருவர் திரிபுவனமாதேவி.திரிபுவனமாதேவி பல்லவ குடியை சேர்ந்தவர் என்ற செய்தியும் உண்டு.ஆதித்த சோழனிற்கு பிறகு முதலாம் பராந்தகன் பதவியேற்றார்.ஆதித்த சோழனுக்கு கன்னரதேவன் என்ற இன்னொரு மகனும் உண்டு.இவர் ஆதித்த சோழன் உயரோடு இருக்கும் போதே மரணித்து விட்டார் என்ற செய்தியும் உண்டு.

சோழப் பேரரசர் ஆதித்ய சோழன் சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்தார். இவரது மகன் பராந்தகன், ஆதித்தயவர்ம சோழன் இறந்த இடத்தில் அவருக்குப் பள்ளிப்படை அமைத்தார். இப்போது இந்த இடம் தொண்டைமானாடு என்று அழைக்கப்படுகிறது. சோழ பேரரசர் ஆதித்தய சோழனின் மறைவுக்கு பிறகு அவர் மகன் முதலாம் பராந்தக சோழப் பேரரசராக பதவி ஏற்றார்.

Exit mobile version