மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! பூலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!
Editor Zhagaram
மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! பூலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!
தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலை தலைமையிடமாகக் கொண்ட பாளையத்தை ஆட்சி செய்து வந்தார் பூலித்தேவன். இவரது ராணுவத் தளபதியாக இருந்தவர் வெண்ணி காலாடி.
காலாடி என்ற பெயர் போர் படையில் காலாட்படை வீரர்களை குறிப்பதாகும். பூலித்தேவனை நேரில் சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய கான்சாகிப் என்கிற மருதநாயகம், இரவில் பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிடலாம் என்று தீர்மானித்தான்.
இதற்காக கான்சாகிப்பின் படைகள், காட்டில் முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி (வெண்ணி காலாடி) சில வீரர்களுடன் சென்று அம்முகாமைத் தாக்கினார்.
அப்போது எதிரி வீரன் ஒருவன் மறைந்திருந்து தாக்கியதால் காயமுற்றார் பெரிய காலாடி. வயிறு கிழிக்கப்பட்டு, குடல் வெளியே வந்த நிலையிலும், தான் துண்டை எடுத்து, வெளியே வந்த தன் குடலை வயிற்றைத் துண்டால் கட்டிக் கொண்டு அவர்களை தோற்கடித்தார்.
பலத்த காயத்துடன் வந்த வெண்ணிக்காலாடியை, பூலித்தேவர்தன் மடியில் கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம், செய்தியை கூறிவிட்டு மரணம் அடைந்தார்.
விடுதலைப் போராட்ட வீரரும் பூலித்தேவன் படைத் தலைமை தளபதி பெரிய காலாடி என்றழைக்கப்படும் வெண்ணிக்காலாடி பலிதான நாள் இன்று. 262 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 20.