கட்டுரைகள்

மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! பூலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!

மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! பூலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!

  • தென்காசி மாவட்டம்‌ நெற்கட்டும் சேவலை தலைமையிடமாகக்‌ கொண்ட பாளையத்தை ஆட்சி செய்து வந்தார்‌ பூலித்தேவன்‌. இவரது ராணுவத்‌ தளபதியாக இருந்தவர்‌ வெண்ணி காலாடி.
  • காலாடி என்ற பெயர்‌ போர்‌ படையில்‌ காலாட்படை வீரர்களை குறிப்பதாகும்‌. பூலித்தேவனை நேரில்‌ சென்று எதிர்க்க முடியாது என்று எண்ணிய கான்சாகிப்‌ என்கிற மருதநாயகம்‌, இரவில்‌ பூலித்தேவரின்‌ கோட்டையை முற்றுகையிடலாம்‌ என்று தீர்மானித்தான்‌.
  • இதற்காக கான்சாகிப்பின்‌ படைகள்‌, காட்டில்‌ முகாமிட்டிருந்தது. இந்த செய்தியை அறிந்த பெரிய காலாடி (வெண்ணி காலாடி) சில வீரர்களுடன்‌ சென்று அம்முகாமைத்‌ தாக்கினார்‌.

மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! புலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!

  • அப்போது எதிரி வீரன்‌ ஒருவன்‌ மறைந்திருந்து தாக்கியதால்‌ காயமுற்றார்‌ பெரிய காலாடி. வயிறு கிழிக்கப்பட்டு, குடல்‌ வெளியே வந்த நிலையிலும்‌, தான்‌ துண்டை எடுத்து, வெளியே வந்த தன்‌ குடலை வயிற்றைத்‌ துண்டால்‌ கட்டிக்‌ கொண்டு அவர்களை தோற்கடித்தார்‌.
  • எதிரிகளுடன்‌ தான்‌ சண்டையிட்டதையும், எதிரிகளை தோற்கடித்ததையும்‌, அவர்கள்‌ படையுடன்‌ காட்டில்‌ பதுங்கியிருப்பதையும்‌ தெரிவிக்க கூறாவளியைப்‌ போல்‌ தன்‌ குதிரையை செலுத்தி பூலித்தேவரிடம்‌ வந்தடைந்தார்‌.

மாவீரன் பெரிய காலாடி (எ) வெண்ணிக்காலாடி! புலித்தேவன் தலைமைப் படைத்தளபதி!

  • பலத்த காயத்துடன்‌ வந்த வெண்ணிக்காலாடியை, பூலித்தேவர்‌தன்‌ மடியில்‌ கிடத்தி நடந்தவற்றை கேட்டுக்கொண்டிந்த நேரம்‌, செய்தியை கூறிவிட்டு மரணம்‌ அடைந்தார்‌.
  • விடுதலைப் போராட்ட வீரரும் பூலித்தேவன் படைத்  தலைமை தளபதி பெரிய காலாடி என்றழைக்கப்படும் வெண்ணிக்காலாடி பலிதான நாள் இன்று. 262 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 20.

User Rating: 3.93 ( 5 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button