பிற்கால பாண்டியர்கள் வரலாறு
- கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து நீண்ட நெடிய வரலாற்று மரபினர் பாண்டியர்கள். பல்வேறு ஏற்ற, இறக்கங்களை கொண்ட பாண்டியர்களின் வரலாற்றில், பிற்கால பாண்டியர்களின் எழுச்சி குறிப்பிடத்தக்கது. பாண்டியர்களின் வரலாற்றை அறிய கல்வெட்டுகளும், செப்பேடுகளும் நிறைந்துள்ளது பிற்காலத்தில் இலக்கியச் சான்றுகள், சிற்றிலக்கியங்களும் பாண்டியர்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறது.
- தொடக்கத்தில் பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகராகவும் விளங்கியது கொற்கை நகரம். கொற்கையில் முத்துக்குளித்தல் முதன்மை தொழிலாக, செல்வ வளமிக்க வணிகமாக விளங்கியது. பாண்டியர்களின் அடுத்த தலைநகரமாக மதுரை விளங்கியது. சங்ககால பாண்டியர்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது மதுரை மதுரையை சுற்றி பாண்டியர்களின் பல பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. களப்பிரர்களின் ஆதிக்கத்தை வீழ்த்தி மீண்டும் பாண்டிய பேரரசை நிறுவியவர் கடுங்கோன் வழிவந்த பாண்டியர்கள்.
- கிபி 642 அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய அரசன் அரியணை ஏறினான். அரிகேசரி மாறவர்மன், பல்லவ அரசர்களான முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மனின் சமகாலத்தவர் ஆவார். திருஞானசம்பந்தர் சமண சமயத்தில் இருந்த அரிகேசரி மாறவர்மன் பாண்டியனை சைவ சமயத்தை ஏற்க வைத்தார். கிபி 600 முதல் கிபி 920 வரை இடைக்கால பாண்டிய பேரரசு மீண்டெழுந்தது.
- அரிகேசரி மாறவர்மனுக்கு பிறகு சிறந்து விளங்கியவர் ஜடில பராந்தக நெடுஞ்சடையன். முதலாம் வரகுணன் என்றழைக்கப்பட்ட ஜடில பராந்தக நெடுஞ்சடையன் கிபி 756 முதல் கிபி 815 வரை ஆட்சி செய்தார். வேள்விக்குடி செப்பேடுகள் கொடையாளியாக பராந்தக நெடுஞ்சடையன் குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் பாண்டியர்களின் ஆட்சியை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர் வரை விரிவுபடுத்தினார். ஜடில பராந்தக நெடுஞ்சடையன் ஆட்சிக்கு பின்னர் ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன், இரண்டாம் வரகுணன் பாண்டிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். பாண்டியர்கள் இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழ வம்சத்தின் எழுச்சியை எதிர்கொண்டனர்.
- கிபி 1190 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சி ஏற்பட்டது. சோழ மன்னனான அதிராஜேந்திரன் மறைவுக்குப் பிறகு பாண்டிய நாட்டில் சோழ மண்டலாதிபதிகளின் ஆட்சி வீழ்ச்சியுற்றது. பிற்கால பாண்டியர்களின் தலைநகராக விளங்கியது மதுரை, பிற்காலப் பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கியது காயல்பட்டினம். காயல்பட்டினத்திற்க்கு இரண்டு முறை பயணம்செய்து வந்தவர் மார்கோபோலோ.. அவர் பாண்டியர்களின் தலைநகரம் மிக அற்புதமான பகுதி என்று புகழ்ந்துள்ளார்.
- பாண்டியநாடு ஈழ நாட்டோடு இணைந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்கக் கற்களையும், முத்துக்களையும் உற்பத்தி செய்தது என்று மார்கோபோலோ குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் பாண்டிய பேரரசின் புகழ்பெற்ற அரசர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவரின் காலம் 1251 முதல் 1767 வரை ஆகும். சடையவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டியர்களின் ஆட்சியை இன்றைய ஆந்திரமாநில நெல்லூர் வரை விரிவுபடுத்தினார். ஹொய்சாளர்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தவர் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆவார். சோழ அரசின் வீழ்ச்சிக்குப் பின் ஊக்கம் பெற்ற மாணவன் அரசராக இருந்த வீர சோமேஸ்வரரை கண்ணனூர் என்ற இடத்தில் போர் புரிந்து சுந்தரபாண்டியன் வீழ்த்தினார்.
- சடையவர்மன் சுந்தரபாண்டியன் கடலூர், காஞ்சிபுரம், மேற்கே ஆர்க்காடு, சேலம் ஆகிய இடங்கள் வரை தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார். விக்கிரம பாண்டியன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சுந்தரபாண்டியன் ஆட்சியின்போது இரண்டு கூட்டு அரசர்களாக அங்கம் வகித்தனர். சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்கு பின் 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தவர் மாறவர்மன் குலசேகரபாண்டியன். மாறவர்மன் குலசேகரனின் இரு மகன்கள் வீரபாண்டியன், சுந்தரபாண்டியன் ஆவர். மாறவர்மனுக்குப் பின் அரசராக பொறுப்பேற்றவர் வீரபாண்டியன். வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் ஆகியோரின் சகோதர யுத்தத்திற்குப் பிறகு பாண்டியர்களின் ஆட்சி வீழ்ச்சியுற்றது. பாண்டியர்களின் தலைநகரான மதுரை பொதுமக்களால் கூடல் என்று அழைக்கப்பட்டது பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக கூடல்கோன், கூடல் காவலன் என்று அழைக்கப்பட்டனர். பாண்டியர்களின் ஆட்சியில் நிலத்தின் உரிமையாளர்கள் பூமிபுத்திரர்கள் என்று அழைக்கப்பட்டனர் அவர்களின் மன்றம் சித்திரமேழி பெரிய நாட்டார் ஆகும். பாண்டியர்களின் ஆட்சியில் பிரதம மந்திரி உத்திர மந்திரி என்றும் அழைக்கப்பட்டனர்.
- மாணிக்கவாசகர், குலச்சிறையார், மாறன் காரி போன்றோர் பாண்டியர்கள் ஆட்சியில் பணியாற்றிய முக்கிய அமைச்சர்கள் ஆவர். பாண்டியர்களின் அரசு செயலகம் ‘எழுத்து மண்டபம்’ என்று அழைக்கப்பட்டது. பாண்டியர்களின் ஆட்சியில் மிக அதிகமாக மதிக்கப்பட்ட அதிகாரிகள் மாறன்-எயினன், சாத்தன்-கணபதி, ஏனாதி-சாத்தன், திற-திறன், மூர்த்தி-எயினன். பாண்டிய ஆட்சியில் படைத் தளபதிக்கு கொடுக்கப்பட்ட பட்டங்கள் பள்ளி-வேலன் பராந்தகன்-பள்ளி மாறன்-ஆதித்தன் தமிழ்வேள்-தென்னவன் எனப்பட்டனர்.
- மண்டலங்கள்-வளநாடுகள்-நாடுகள் கூற்றங்கள் என நிர்வாகப் பிரிவுகளை பாண்டியர் ஆட்சியில் முறைப்படுத்தி இருந்தனர். பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் நாடுகளை நிர்வகிப்பவர்கள் நாட்டார்கள் என்றழைக்கப்பட்டனர். பாண்டிய மன்னர்கள் சைவம் வைணவம் போன்ற மதங்களை சமமாகவே கருதினர்.
- காயல் துறைமுகத்தில் அரேபிய வணிகர்களின் மூலம் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. விழாக்களுக்கும் போர் புரிவதற்கும் அவர்களுக்காக முதலீடு செய்தனர் என்று மார்க்கோபோலோ மற்றும் வாசப் போன்ற அயல்நாட்டு பயணிகள் கூறுகின்றனர்.
- 13,14 நூற்றாண்டுகளில் குதிரை வணிகம் அதிகரிப்பதாகவும் 10,000’க்கும் மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய துறைமுகங்களிலும் இறக்குமதி ஆயின என வாசப் பயணி குறிப்பிடுகிறார். பாண்டியர்களின் தங்க நாணயங்கள் காசு, கழஞ்சு, பொன் என்று அழைக்கப்பட்டது. மிக நீண்ட வரலாற்று கொண்ட பாண்டியர்கள் பெரும் போரின் வெற்றி தோல்விகளையும் கண்டனர், பண்பாட்டு வளமையும் வணிக செழிப்பும் கொண்டு சிறப்பாக ஆண்டனர்.