இந்திய திரையுலகில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து, சாதனை படைத்து…தொடர்ந்து தன்னுடைய இசைப்பணி ஆற்றி வரும் இசைஞானி இளையராஜா இன்றுவரை பெற்ற விருதுகள்…
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்:
- 1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே திரைப்படத்திற்காகவும்
- 1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்திற்காகவும்
- 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்திற்காகவும்
- 1988 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திரம் திரைப்படத்திற்காகவும்
- 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 மற்றும் கரகாட்டக்காரன் திரைப்படங்களுக்காகவும்
- 2009 ஆம் ஆண்டு அஜந்தா திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.
கேரள மாநில திரைப்பட விருதுகள்:
- 1994 ஆம் ஆண்டு சம்மோஹனம் என்ற திரைப்படத்திற்காகவும்
- 1995 ஆம் ஆண்டு காலாபாணி என்ற திரைப்படத்திற்காகவும்
- 1998 ஆம் ஆண்டு கல்லு கொண்டாரு பெண்ணு என்ற திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.
நிஷாகாந்தி புரஷ்காரம் விருது:
2016-ம் ஆண்டு கேரள அரசு சார்பில் இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
நந்தி விருதுகள் (ஆந்திரா):
- 1981-ம் ஆண்டு சீதாகோகா சிலுகாகா படத்திற்காகவும்
- 1988-ம் ஆண்டு ருத்ரவீணா படத்திற்காகவும்
- 1990-ம் ஆண்டு ஜகதேகா வீருடு அதிலோக சுந்தரி படத்திற்காகவும்
- 2011-ம் ஆண்டு ஸ்ரீ ராம ராஜ்யம் படத்திற்காகவும்
- 2012-ம் ஆண்டு ஏதோ வெள்ளிபோயிந்தி மனசு படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.
கோல்டன் ரெமி விருது:
சர்வதேச ஹூஸ்டன் திரைப்பட விழாவில் 2005-ம் ஆண்டு விஸ்வ துளசி என்ற படத்திற்காக கோல்டன் ரெமி விருது பெற்றார்.
சங்கீத நாடக அகாடமி விருது:
- 2012 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிலிம் பேர் விருதுகள்:
- 1989 ஆம் ஆண்டு அவருடைய சிறப்பான பங்களிப்பிற்காகவும்
- 1990 ஆம் ஆண்டு பொப்பிலி ராஜா என்ற தெலுங்கு திரைப்படத்திற்காகவும்
- 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும்
- 2005 ஆம் ஆண்டு அச்சுவின்டே அம்மா என்ற மலையாளத் திரைப்படத்திற்காகவும் கிடைக்கப் பெற்றார்.
கலைமாமணி விருது:
- 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
தேசிய விருதுகள்:
- 1984 ஆம் ஆண்டு ஆண்டு சாகர சங்கமம் என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது.
- 1986 ஆம் ஆண்டு சிந்து பைரவி படத்திற்காக தேசிய விருது.
- 1989 ஆம் ஆண்டு ருத்ர வீணா என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருது.
- 2009 ஆம் ஆண்டு பழசிராஜா என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது.
- 2016 ஆம் ஆண்டு தாரை தப்பட்டை படத்திற்காக பின்னணி இசைக்கான தேசிய விருது.
வாழ்நாள் சாதனையாளர் விருது:
2015-ம் ஆண்டு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றார்.
பத்ம விருதுகள்:
1.2010 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2. 2018 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் வழங்கி கௌரவிக்கப்பட்டிருக்கிறார்.
முனைவர் பட்டம்:
1.1994 ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
2.1996 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது.
3.2022 ஆம் ஆண்டில் காந்தி கிராம பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.