தீபாவளி தமிழர் பண்டிகையா?
தீபாவளி தமிழர் பண்டிகையா? என்பதை குறித்து முனைவர் தொ.ப அவர்கள்
கூறுவது என்ன??
தமிழர் பண்டிகையான உழவர்திருநாள் பொங்கல் விழாவுக்கு
அடுத்தபடியாக தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள்
கொண்டாடும் விழாவாக தீபாவளி இருக்கிறது. பொங்கல் விழா
வேளாண்மைக்கு உதவும் கதிரவனை வணங்கும் நோக்கிலும்
உழவுக்கு உதவிய கால்நடைகளையும் வணங்கும் நோக்கிலும்
முன்னோர்களை நினைவு கூறும் காணும் பொங்கல் சேர்த்து
கொண்டாடப்படும் ஒரு தமிழ்ப் பண்டிகையாகும். ஆனால்
தீபாவளி கொண்டாடுவது என்பது எந்த ஒரு பண்பாட்டு நிகழ்வும் இல்லாத
ஒரு விழாவாக நடைமுறையில் உள்ளது.
தீபாவளி புராணக்கதை என்ன என்பதை மீண்டும் மக்கள்
மனதில் விதைப்பதை விட ஏன் தமிழர்பண் டிகை இல்லை என்று
தமிழ்ப் பெரியோர்கள் சொன்னதை பார்ப்போம்!
சமணமதத்தின் மகாவீரர் இறந்ததுதான் நரகாசுரன் அழிந்ததாக
கொண்டாடப்படுகிறது என்ற கருத்து வரலாற்று ஆதாரங்கள்
வாயிலாக நமக்கு தெரிய வருகிறது. பெரும் பொருளாதாரச்
செலவு செய்து சுற்றுப்புறச்சூழலுக்கும் குந்தகம் விளைவித்து
கொண்டாடப்படும் தீபாவளி,தமிழர்பண்டிகையன்று என்கிறார்
பேராசிரியர் தொ.பரமசிவன்.
அவரின் “அறியப்படாத தமிழகம்”நூலில் கூறுவது தீபாவளி
தமிழ்நாட்டின் மரபு வழிப் பொருளாதாரம் மற்றும் பருவ
நிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு விழாவாக உள்ளது.
தீபாவளியை குறிக்கும் வெடி அதன் மூலப் பொருளான
வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்கு 15-ஆம் நூற்றாண்டு வரை
அறிமுகமாகவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாக
கூறப்படும் தீபாவளி கதை,தமிழ் பண்பாடு த தொடர்பு
உடையதன்று மாறாக இன்று பிராமணிய வேத மதத்தின் சார்பாக
எழுந்த கட்டுக்கதையாகும்.
இந்நாள் பிராமணிய வேத மதத்தின் எதிரியான சமணமதத்தின்
24ஆம் தீர்த்தங்கரரான மகாவீரர் வீடுபேறு அடைந்த நாளாகும்.
இறந்த நாளை வரிசை யாக தீபங்களை ஏற்றி கொண்டாடுமாறு
மகாவீரர் அவர் மதத்தவரை கேட்டுக் கொண்டார் என்பதற்காக சமணர்கள்
சிறப்பாக கொண்டாடுகின்றனர். பிராமணிய வேதமதத்தின்
பழை ய எதிரிகளான மகாவீரர் இறந்ததை தான் வேத மதத்தினரும்
கொண்டாடுகின்றனர.நரகாசுரன் எனும் அரக்கன் இறந்ததாக
பிராமணிய தீபாவளி கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த
நாளை தான்.
விஜயநகர பேரரசு தமிழ்நாட்டில் நுழைந்த கிபி 15 நூற்றாண் டு
தொடங்கிய பிறகுதான் தீபாவளி இங்கு ஒரு திருநாளாக
கொண்டாடப்படுகிறது அதற்கு முன் கொண்டாடப்படவில்லை
இவ்வாறாக முனைவர் தொ.பரமசிவன் தமிழர்திருநாள் தீபாவளி
இல்லை என்பதை நிறுவுகிறார.்
தீபாவளி குறித்து பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய பாடல்:
நரகனை கொன்ற நாள் நல் விழாவா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லவனா தீயனா?
அசுரன் என்றவனை அழைக் கின்றாரே ?
இராக்கதன் என்றும் இயம்பு கின்றாரே ?
இப்பெயர் எல்லாம் யாரை குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் என சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும் எண்ணா தெதையும்
நண்ணுவ என்பது படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல் கழுத்துப் போயினும்
கைக் கொள்ள வேண்டாம் ஆயிரம் கோடி ஆண்டு சொல்லினும்
தூய தூயதாம் துரும்பிரும் பாகாது உனக்கெது தெரியும்
உள்ள நாளெல்லாம் நினத்து நடத்திய நிகழ்சசியை விடுவதா?
என்று கேட்பவனை ஏனடா குழந்தாய்! உனக்கே தெரியும்
உரைப்பாய் என்று கேட்கும் நாள் மடமை கிழிக்கும் நாள் அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரும் நாள் என்னால் தீவாவா -வளியும்
மானத்துக்கு தீ-வாளி ஆயின் சீ என்று விடுவாரே !
என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
மறைமலை அடிகள் தீபாவளி குறித்துக் கூறியது:
“தமிழர்மதம்” எனும் நூலில் “ஆரிய பிராமணர்கள் கட்டுவித்த
கற்பனை கதையே ” தீபாவளி” என்கிறார்.
கேரளாவில் தீபாவளி பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை
இந்திய ஒன்றியத்தில் தீபாவளியை பிற தேசிய இனங்கள்
வெவ்வேறு வடிவத்தில் கொண்டாடுகின்றனர் கிபி 1577 இல்
“பொற்கோயில்” கட்டுமான பணிகள் த தொடங்கிய நாளை
சீக்கியர்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். குஜராத்திகள்
மார்வாடிகளுக்கு இந்நாள் புத்தாண்டு நாளாகும். புத்தரின்
திருவிஜயத்தை வழிபடுவதற்காக பௌத்த மதத்தினர் தீபங்களை
வரிசையாக ஏற்றி “தீபஉற்சவம்” என்ற பெயரில் இந்நாளை கொண்டாடுகின்றனர். பிராமணிய வேத மதம் நரகாசுரன்
இறந்ததை க கொண்டாடுகிறது. இறப்பை தமிழரகள் ஒருப போதும்
கொண் டாடுபவர்கள் இல்லை. பண்டைத் தமிழர்கள் தீபாவளியை
கொண்டாடியதற்கு சான்றுகளும் இல்லை .
நீண்ட காலமாக மக்களிடத்தே இருப்பதில் ஏதேனும் புனைவைத்
திணித்து இதன் வயப்படுத்துவது ஆரியத்தின் நெடுங்கால வழக்கம்.
கடவுள்களையும் அவர்களின் புனைவுக்கதையோடுச் சேர்த்து
தன்வயப்படுத்திக் கொள்வார்கள். சங்க இலக்கிய நூலான
அகநானூறில் தமிழரகள் ஐப்பசி மாதம் அமாவாசை நாளில்
விளக்கு ஏற்றி செய்யும் வழிபாடு குறித்து இடம்பெற்றுள்ளது.
பின்னாளில் இதனை வடநாட்டு தீபாவளியோடு
சேர்க்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.
தீபாவளி என்று இவர்கள் சொல்லும் அதே நாளில் கறி சமைத்து
உண்ணும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது. ஆனால்”வடவர்களின்
தீபாவளி” வெற்று இனிப்பு பலகாரங்கள் சைவ படையலோடு
முடிந்துவிடுகிறது.
பத்துப்பாடடு் நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில் விளக்கு
வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்
இரும்பு செய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇீ நெல்லும் மலரும்
தூஉய்க் கைதொழுது… (நெடுநல்வாடை : 42-43)
சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார்
நாற்பதில் கார்த்திகை மாத தீப வழிபாடடு் ஆதாரம் உள்ளது.
நலமிகு கார்த்திகை நாட்டவர்
இட்ட தலைநாள் நாள் விளக்கு (கார்நாற்பது-26).
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும்
கார்த்திகை விளக்கு குறித்து, “கார்த்திகை விளக்குஇட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தனர்” என்று பாடுகிறது.
நீண்ட காலமாகப் பின்பற்றி வந்த ஐப்பசி மாத அமாவாசை
விளக்கேற்றும் நாளையும், கார்த்திகை தீப திருநாளையும்
ஒருங்கே சேர்த்து தீபாவளி என்று தமிழர்களிடம் திணித்துள்ளனர்
வடவர்கள். கார்த்திகை தீபத்தை விட தமிழர்கள் தீபாவளியை
எட்டுத்திக்கும் கொண்டாடி வருகின்றனர்.
பிற மதங்களை ஏற்பதை போல, பிற பண்டிகைகளையும்
தமிழர்கள் ஏற்றுக் கொண்டாடி வருகின்றனர். இயற்கையை
நேசிக்கும் தமிழர்கள் எந்த ஒரு காலத்திலும் பட்டாசு வெடித்து
இந்நாளை கொண்டாடியதில்லை குழந்தைகள், முதியோர்கள்,
நோயுற்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்லாது
பறவைகள், விலங்குகள் என பல உயிர்களும் பட்டாசு வெடிச்
சத்தத்தால், காற்று மாசுபாட்டால் பாதிப்புக்குள்ளாகின்றன.
இருளை நீக்க, தீபங்களை ஏற்றி பண்டிகைகளை கொண்டாடுவது
அவரவரின் தனிப்பட்ட விருப்பம் ஆனால் அதிலுள்ள பொய்யான
கட்டுக்கதைகளையும், பண்பாட்டு மாற்றத்தையும்,
பெரும் செல்வம் வீணாக்கப்படுதையும் தமிழர்களுக்கு எடுத்துக்
கூற வேண்டியது “தமிழ்ப் பெரியோர்களின் எண்ணமாக”
வெளிப்படுகிறது.
அவ்வாறே மறைமலை அடிகளார், பாவேந்தர்பாரதிதாசன்,
முனைவர் தொ.பரமசிவன் அவர்களின் கருத்துக்கள் மூலம்
தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்பதை நாம் அறிகிறோம்.
~வியன் தமிழ்