Site icon ழகரம்

சோழ மன்னன் அரிஞ்சய சோழன் வரலாறு

கண்டராதிதனுக்கு பிறகு அவரது சகோதரன் அரிஞ்சய சோழன் அரசராக பொறுபேற்றார்.இவர் கி.பி.956-957 வரை ஆண்டார்.இவர் மிக குறுகிய காலமே ஆண்டார்.இவரை அரிந்தமன் என்றும் அரிகுலகேசரி என்றும் பெயர் வழங்கப்பட்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.இவர் முதலாம் பராந்தகனின் மூன்றாவது மகன்.இவர் பலம் மிகுந்த பேராற்றல் உடையவர் என்றும் பரகேசரி என்ற பட்டம் பெற்றவர் என்றும் செப்பேடுகள் கூறுகின்றன.

இவர் தந்தையின் ஆட்சி இறுதியில் ராஷ்டிர கூட மன்னன் கிருஷ்ண தேவன் தொண்டை நாட்டையும்,திருமுனைப்பாடி நாட்டையும் கைப்பற்றி கொண்டார்.அதை மீட்டெடுக்க இவர் பெரும் முயற்சிகள் செய்தார்.அவ்விரு நாடுகளையும் கிருஷ்ண தேவன்,வைதும்ப ராயன் என்ற குறுநில மன்னனுக்கு ஒப்படைத்தார்.மேலும் அவ்விரு நாடுகளையும் தன்னுடைய பிரதிநிதியாக ஆட்சி செய்யுமாறு உத்தரவிட்டார்.இது குறித்து தென்னாற்காட்டில் உள்ள கீழூர் பகுதியில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பகுதியை கைப்பற்ற அரிஞ்சய சோழன் தந்திரமான நடவடிக்கையில் ஈடுபட்டார்.அதன்படி தன் மகள் அரிஞ்சிகை பிராட்டியாரை ஒரு வாணர் குல மன்னனுக்கு திருமணம் செய்து வைத்தார்.இதன் மூலம் வாணர்குல மன்னனுக்கும் ராஷ்டிரகூட அரசுக்கும் இடையிலான தொடர்பை அற்று போக வைத்தார். இதன் பிறகு தொண்டை நாட்டையும்,திருமுனைப்பாடி நாட்டையும் கைப்பற்ற ராஷ்டிரகூட மன்னன் மீது  போர் தொடுத்தார் அரிஞ்சய சோழன்.இப்போரில் நடைபெற்ற  நிகழ்வுகள் குறித்து  இதுவரை கல்வெட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை அனால் அரிஞ்சய சோழன் வடஆற்காட்டில் உள்ள ஆற்றூரில் இவர் இறந்தார் என்று தெரிகிறது.மேலும் இவர் போரில் இறந்தாரா அல்லது இயற்கை மரணமா என்பதற்கான தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.

அரிஞ்சய சோழனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள்.வீமன் குந்தவை,ஆதித்த கோதைபிராட்டி,கல்யாணி,பூதி ஆதித்தப் பிடாரி ஆகியோர் அரிஞ்சய சோழனின் மனைவிகள்.இவருடைய மனிவியான பூதி ஆதித்த பிடாரி,திருச்சிக்கு மேற்கே ஏழு மைல் தொலைவில் அமைந்துள்ள திருச்செந்துறை கோவிலில் அரிஞ்சய சோழனுக்கு கற்றளி எழுப்பினார்.இவருடைய பேரனான ராஜராஜ சோழன்,வட ஆற்காடு மாவட்டத்திற்கு வடக்கே ஆறு மைல் தொலைவவில் உள்ள மேற்பாடி என்னும் ஊரில் கோவில் ஒன்றை எடுத்து,அக்கோவிலுக்கு நிலத்தை வழங்கினார். இந்தக் கோயிலிலும் இதற்கு எதிராக அமைந்துள்ள மற்றொரு கோயிலிலும் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

Exit mobile version